முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களிலேயே அதிக வரவேற்பையும் மக்களிடம் அதிக ஆதரவையும் பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தை பொறுத்தவரை பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வசூல் என்பது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதனால்தான் இப்பொழுதும் 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு ஒப்பிடும் போது அவரது வயதில் எந்த ஒரு தமிழ் நடிகரும் இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு கதாநாயகனாக இதற்கு முன்பு நடிக்கவில்லை.

ரஜினிகாந்த்:

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராகவே இருந்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். அதே சமயம் ரஜினிகாந்த் பேசும் மேடைப்பேச்சுகள் என்பது எப்போதுமே சர்ச்சையான ஒரு விஷயமாகதான் இருந்து வருகிறது.

முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

ஒவ்வொரு முறை பத்திரிகையாளர் முன்பும் மேடைகளிலும் ரஜினிகாந்த் பேசும் பொழுது ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசிவிடுவார் பிறகு அதுவே பெரிய பிரச்சனையாகிவிடும். உதாரணத்திற்கு காலா திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தது.

அது தொடர்பாக ரஜினிகாந்த் பேசியிருந்தார். அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் போராட்டம் போராட்டம் என்று நாட்டை சுடுகாடு ஆக்கி விடுவார்கள் போல என்று அவர் பேசியிருந்தார்.

பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்

இது மக்கள் மத்தியில் அதிக அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக காலா திரைப்படம் வரவேற்பை இழந்தது. அதேபோல நிறைய இடங்களில் பேசி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.

கலைஞர் என்னும் தாய் என்கிற நூல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் பேசும் பொழுது நான் இங்கு வந்த பிறகு என்னை பேச பேசுகிறீர்களா என்று கேட்டார்கள், நான் பேசுகிறேன் என்று கூறினேன்.

முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

முதல்வர் குறித்து பேசிய ரஜினி

இங்கு வந்து விட்ட பிறகு பேசாமல் எப்படி செல்ல முடியும் ஆனால் இங்கு இருக்கும் அறிவார்ந்த மக்கள்களையும் முதலமைச்சரையும் பார்க்கும் பொழுது இங்கு நாம் பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம் என்று எனக்கு தோன்றியது.

இருந்தாலும் வந்துவிட்ட காரணத்தினால் பேச வேண்டுமே என்று கூறிய ரஜினிகாந்த் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து நிறைய விஷயங்களை கூறியிருந்தார். அதில் கூறும் பொழுது இந்த உலகத்திலேயே ஒரு அரசியல் தலைவருக்கு இவ்வளவு சிறப்பாக நூற்றாண்டு விழாவை யாருமே நடந்திருக்க முடியாது. அந்த விஷயத்துக்காகவே இந்த கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதற்கு பாராட்ட வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.