மனைவியின் கருமுட்டையை எடுத்து இதை பண்ணலாம்..! – ரகுல் பிரீத் சிங் வெளிப்படையான பேச்சு..!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் உடலுறவு சார்ந்த பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த வகையில் நேற்று இரண்டு ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று ராகுல் பிரீத் சிங் கூறியதை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

அந்த வகையில் இன்று கருமுட்டை சேமிப்பு குறித்து நடிகை ராகுல் ப்ரீத் சிங் பேசியிருக்க கூடிய தகவலை பார்ப்போம்.

அதற்கு முன்பாக வடமாநிலத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த கருமுட்டையை மனைவியின் அனுமதி இல்லாமல் திருடி சென்ற கணவர் பற்றிய செய்தி ஒன்று பத்திரிகையில் வெளியாகி இருந்தது.

இந்த செய்தி குறித்து பேசிய நடிகை ராகுல் ப்ரீத் சிங், தங்களுக்கு இப்போது குழந்தைகள் வேண்டாம் சில ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்த தம்பதி தங்களுடைய கருமுட்டையை அதற்கான வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

தற்போது அவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்ட நிலையில் தனக்கு குழந்தை வேண்டும் என்பதால் தன்னுடைய மனைவியின் கருமுட்டையை அவருடைய அனுமதி இல்லாமல் வாங்கிச் சென்றிருக்கிறார் அந்த கணவர்.

இந்த செய்தியை விட்டு விடுவோம். அது அவர்களுடைய குடும்ப பிரச்சனை. இந்த செய்தியில் இருந்து நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு குழந்தை தேவையில்லை என்று நினைத்தால் நாம் இளமையாக இருக்கும் பொழுது ஆரோக்கியமாக இருக்கும் பொழுது கருமுட்டையை எடுத்து சேமித்து வைத்துக் கொள்வது என்பது இன்றியமையாத ஒரு விஷயம்.

இப்போதைக்கு குழந்தை தேவையில்லை என்று நீங்கள் முடிவு எடுத்தால். நிச்சயமாக நீங்கள் உங்களுடைய கருமுட்டையை எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

ஐந்து வருடங்களுக்கு கழித்தோ.. 10 வருடங்கள் கழித்தோ.. இப்போது இருக்கும் அதே ஆற்றலுடன் உங்களுடைய கருமுட்டை வளரும் என உறுதியாக சொல்ல முடியாது. உங்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவுகள் ஏற்படலாம். நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகலாம்.

இதற்க்கான வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே உடல்நலம் சரியாக இருக்கும் பொழுது நல்ல கருமுட்டைகள் கிடைக்கும் பொழுது அதனை பத்திரமாக எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இப்படி யாராவது முடிவில் இருந்தால் அவர்கள் நிச்சயமாக தங்களுடைய மருத்துவரை அணுகி அதற்கான வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

நிறைய பேர் இன்று, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும்.. வீடு வாங்கிவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்… கார் வாங்கிவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. இருக்கக்கூடிய கடனை அடைத்து விட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. என்றெல்லாம் பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார்கள்.

அப்படி திட்டங்கள் தீட்டுவது என்னை பொறுத்தவரை சரி கிடையாது. குழந்தை என்பது ஒரு வரப்பிரசாதம். அதனை வேண்டாம் என்று நாமே தள்ளிப் போடுவது தவறான விஷயம்.

ஆனாலும் சூழ்நிலை காரணமாக சிலரால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொண்டால் சிக்கலாகிவிடும் என்று நினைப்பவர்கள் இப்படியான வழிமுறைகளில் தங்களுடைய கருமுட்டைகளை சேகரித்து பிறகு அதே கருமுட்டையை வைத்து குழந்தையை பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ உலகில் இது இன்று சாத்தியமாகிறது. இப்படி ஒரு விஷயம் இருப்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த செய்தியை நாம் பாசிட்டிவாக பார்க்கலாம் என பதிவு செய்திருக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …