தியேட்டருக்குப் போயி சினிமா பாருங்க…. சினிமாவுல ரொம்ப சிரமம் இருக்கு – கில்லி ராகுல் ப்ரீத் சிங் !

தாக்க தடையற என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர்  2009ல் தெலுங்கில் வெளியான கில்லி படத்தில் நடித்திருக்கிறார். இந்த சமயத்தில் இவர் கல்லூரியில் ஒரு மாடலாக இருந்தார்.

மேலும் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்திருக்கும் ராகுல் ப்ரீத் சிங் சினிமாவில் மிகவும் கஷ்டங்கள் நிறைய இருக்கு என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா துறைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று எந்த அளவுக்கு இந்தத் துறை மிகப்பெரிதாக இருக்கும் என்று அவர் கருதவில்லை. சிறிதளவு பணம் சம்பாதித்தால் போதுமானது என்று தான் இறங்கி வந்ததாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இவருக்கு திகில் நிறைந்த பேய் படங்கள் மிகவும் பிடிக்கும்  அதனை அதிகளவு ஓடிடி, டிவியில் பார்க்கலாம் என்று கூறியதோடு சினிமாவில்தான் மிகவும் சிரமப்பட்டு தான் உரைப்பதாக கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

ரகுல் பிரீத் சிங் நடித்த கிள்ளி என்ற கன்னட திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும், சிறந்த கதாபாத்திர நடிகை என பல விருதுகளை பெற்று தந்துள்ளது.

 மேலும் ஒரு சினிமா படத்தை தயாரித்து எடுப்பதற்கு எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது தெரியுமா என்ற கேள்வியை கேட்டதோடு ஒவ்வொரு நாளும் நடிகர்-நடிகைகள் கஷ்டப்படுவதை விட அந்த படத்தின் உதவி இயக்குனர்கள் லைட்மேன்கள்   கேமராவை இயக்குபவர் என எல்லாருமே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 14 மணி நேரம் உழைப்பதாக கூறுகிறார்.

அப்படிப்பட்ட கஷ்டமான உழைப்பில் உருவாகக்கூடிய படத்தை தயவு செய்து அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் அப்பொழுது தான் எல்லோருடைய வாழ்க்கையிலும் வறுமை நீங்கி சந்தோஷம் பொங்கும் என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த பேட்டியால் பெரிதும் கவரப்பட்ட ரசிகர்கள் அவரின் குணத்தை எண்ணி வியந்து பாராட்டினார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …