விஜய், அஜித் போல பேசத் தெரியாது… ஆனால்… RRR விழாவில் ராம்சரண் கலகல பேச்சு…!

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் ( Ram Charan ), ஜூனியர் என்.டி.ஆர். நடித்திருக்கும் ஆர்.ஆர்.ஆர். படம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

பாகுபலிக்கு பிறகு இந்தியா முழுதும் பிரபலமான இயக்குனர் ராஜமௌலியின் திரைப்படம் என்பதால் இந்தியா முழுதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கிடக்கின்றது.

கிட்ட தட்ட நான்கு ஆண்டுகள் இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம் சரண் இந்த படத்தின் தமிழ் பதிப்பு குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை வேறு யாராவது பேசிக்கொள்ளட்டும் என விலகிவிடலாம் என நினைத்தேன். எனக்கு தமிழ் தெரியும், பேசுவேன். ஆனால், சரளமாக பேச வராது. இதனால், தமிழ் டப்பிங்கை வேற யாரவது ஆர்டிஸ்ட் வச்சி பண்ண வச்சிடலாம் என நினைத்தேன்.

ஆனால், ராஜமௌலி.. நீங்க தான் பேசணும். அப்போது தான் அது சரியா இருக்கும் என்றார். படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை மதன் கார்க்கி எழுதி கொடுத்தார். அவருக்கு மிகவும் நன்றி.

ஒவ்வொரு நாள் டப்பிங் பணி முடியும் போதும் மதன் கார்க்கி ஒகே சொன்னால் தான் அடுத்த சீனுக்கே போவேன். ராஜமௌலி OK சொன்னால் கூட எனக்கு திருப்தி வராது. மதன் கார்க்கி ஒகே சொன்னால் மட்டும் தான் நான் அடுத்த சீனுக்கே போவேன்.

இங்கு உள்ள சூப்பர் ஸ்டார்கள், விஜய் சார், அஜித் சார், சிவகார்த்திகேயன் போல எல்லாம் எங்களால் தமிழ் பேச முடியாது.

ஆனால், எங்களால் எவ்வளவு முடியுமோ.. அத விட ஒரு படி மேலே நாங்கள் உழைத்து பேசியுள்ளோம். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என கூறினார் ராம் சரண்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …