கரகாட்டக்காரன் புகழ் மக்கள் நாயகன் ராம்ராஜ் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறாரா? படத்தின் பெயர் – சாமானியன்!

 1977 களில் சின்னஞ் சிறு வேடங்களில் நடித்து வந்த ராமராஜ் .அதன் பின்னர் 1985 ல்  மண்ணுக்கேத்த போன்ற பெண்ணு படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிறகு 1986 இல்  நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவர் மீண்டும் ஒரு புதிய படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி விட்டது. இந்த படமானது ராமராஜனின் நாற்பத்தி ஐந்தாவது படமாக இருக்கும். இந்த படத்தின் பெயர் சாமானியன் என்பதாகும். இந்த படம் பெருமளவு வெற்றி அடையும் என்று அனைவரும் கருதுகிறார்கள்.

 இதன் பிறகு 1989 இல் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் தமிழ் திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. சுமார் 400 நாட்களுக்கு மேல் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஓடிய இந்தப் படம் ராமராஜனுக்கு பட்டி தொட்டியில் உள்ள அனைத்து மக்களையும் ரசிகர்கள் ஆக்கியது.

 இதனை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்த ராமராஜனின் படம் சுமார் 100 நாட்கள் வரை ஓடியது. மக்கள் நாயகன்  என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவரை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு கிராமத்து மக்கள் பார்த்தார்கள். இதனைத்தொடர்ந்து இவர் அரசியல் இறங்குதல் ஆரம்பமானது. இவர்  1998 ஆம் ஆண்டு நடந்த 12 வது  மக்களவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக  போட்டியிட்டு திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

 இதனை அடுத்து இவர் அரசியல் மற்றும் சினிமா வாழ்விலிருந்து விலக்கியிருந்தார்.பிறகு 2001ல்  சீறி வரும் காளை என்ற படத்தில் நடித்தார். மேலும் 2012 ஆம் ஆண்டு  மேதை என்ற படத்தில் நடித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

எனினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ராமராஜ் தற்போது களமிறங்கி இருப்பதின் காரணம் என்ன என்று யாருக்கும் தெரியாது எனினும் இவரின் இந்த படம் பெரும் வெற்றி பெறுமா அதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தற்போது உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …