இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு காலத்தில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு மகனுக்கு தாயாக இருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

திருமணத்திற்கு பிறகும் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் முன்னணி நடிகர்களாக திகழும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கக்கூடிய இவர் பல விருதுகளை பெற்றிருக்கிறார்.


தற்போது 53 வயதை எட்டிப் பிடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் கிளாமர் ரோலாக இருந்தாலும், அம்மன் ரோலாக இருந்தாலும், எல்லா வகையான கேரக்டர்களுக்கும் ஏற்ற படி தன்னை மாற்றிக் கொண்டு நடிக்கக்கூடிய அற்புத நடிகையாக திகழ்கிறார்.

இவரது நடிப்பை படையப்பாவில் நீலாம்பரியாகவும், பாகுபலி ராஜமாதாகவும், அம்மன் திரைப்படத்தில் அம்மனாகவும், பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் மாடர்ன் அழகி மேகியாகவும் வந்து அசத்தி ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

இளமை ரகசியம்..

இன்று வரை திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக நடித்து வரும் இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் விளம்பரங்கள், சீரியல்கள், கலை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் பங்கேற்று மக்கள் விரும்பும் நடிகையாக திகழ்கிறார்.


இந்நிலையில் இவரின் இளமை மாறாத தோற்றத்திற்கு என்ன காரணம் எப்படி இந்த 53 வயதிலும் இளமையாக காட்சியளிக்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

பிட்னஸ் சீக்ரெட்..

அந்த வகையில் தற்போது இவரின் பிட்னஸ் ரகசியம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது பிட்னஸுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.

அதில் முதலாவதாக யோகாவை கூறலாம். யோகாவை செய்வதின் மூலம் அவரது உடல் மற்றும் மனது லேசாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இளமை தோற்றத்தையும் தந்துள்ளதாம்.
மேலும் இவர் ஜிம்முக்கு சென்று தனது தசைகளை டைட்டாக மாற்றவும், பளபளப்பாக வைத்திருக்கவும் ட்ரைனிங் எடுத்துக் கொள்வதால் உடல்வாகுவை சரியாக மெயின் டெயின் செய்ய முடிகிறது என்ற கருத்தை கூறியிருக்கிறார்.


மேலும் தினமும் சைக்கிளிங், ஜாக்கிங், வேகமான நடைபயிற்சி போன்றவற்றை பொழுது போக்காக வைத்திருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இளமையான தோற்றத்தை இன்று வரை பெற்றிருப்பதாக கூறி இருக்கக்கூடிய கருத்துக்களை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

மேலும் உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக உடற்பயிற்சியை செய்வதால் இன்னும் இளமையாக இருக்கக்கூடிய இவர் பாடி புல்லிங், கோர் ரொட்டேஷன், ஸ்க்வாட், கிரிப் ஸ்ட்ரென்த் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.


மேலும் நீரால் நிரம்பி இருக்கும் நமது உடலை நச்சுக்கள் இல்லாமல் பாதுகாக்க அதிக அளவு நீரை தினமும் பருகி வருவதாலும் எப்போதுமே இளமையாக இருப்பது போல் காட்சி அளிப்பதாக கூறியிருப்பதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் வியந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இவரது பிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொண்டவர்கள் அவர்களின் வாழ்க்கையில் இதையெல்லாம் ஃபாலோ செய்யும் போது கண்டிப்பாக இளமையோடு இருக்கலாம். எனவே இன்று முதல் உங்கள் பிட்னஸ் மெயின்டைன் செய்ய ரம்யா கிருஷ்ணன் உடைத்த அந்த பிட்னஸ் சீக்ரெட்டை நீங்களும் ஃபாலோ செய்யுங்கள். எப்போதும் இளமையாக இருங்க.