தற்போது 51 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் சின்னத்திரையிலும் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கல்லா கட்டி வருகிறார்.
இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு ரித்விக் என்ற மகனும் உள்ளார்.
தன்னுடைய 13 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரம்யாகிருஷ்ணன் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று கிடுகிடுவென முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது 51 வயதாகும் ரம்யாகிருஷ்ணன் கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் ரம்யாகிருஷ்ணன்.
தற்பொழுது உயர்ந்த மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இவர் விதவிதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார். அப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இருக்கும் தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது ஆரஞ்சு நிற புடவை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.