திருமணம் எப்போது..? – ரம்யா பாண்டியன் பதில்..!

சமீப காலமாக இணையத்தில் இல்லாத வேலைகளை பார்த்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பேமஸ் ஆனாவர் ரம்யா பாண்டியன்.

டம்மி டப்பாசு, ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் போன்ற சுமாரான படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டார். நடிகை ரம்யா பாண்டியன் சில மாதங்களுக்கு முன்பு தனது கவர்ச்சியான புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். அவை இணைய தளங்களில் தீயாக பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கின. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்தன.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போங்க கல்யாணம்…? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து ரம்யா பாண்டியன் கூறும்போது, “திருமணம் செய்து கொள்ள முதலில் ஒருவரை நான் தேடி கண்டறிய வேண்டும். அப்புறம், அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும். இன்னும் அப்படி ஒருவரை நான் கண்டுபிடிக்கவில்லை. எனவே, இப்போது திருமணத்துக்கு வாய்ப்பு இல்லை’’ என்றார்.

---- Advertisement ----

---- Advertisement ----