தெறிக்கவிட தயாரானா ரம்யா பாண்டியன்.. – ரொமாண்டிக் ஆல்பம்..!

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் பிரபலமானார்.நடிகை ரம்யா பாண்டியன் டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதையடுத்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தார்.2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

பின்பு கலக்க போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு 3rd Runner-Up ஆக வெற்றிப்பெற்றார் ரம்யா பாண்டியன்.

கண்டமேனிக்கு படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும்… அது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ரம்யா பாண்டியன்.

இதை தொடர்ந்து தற்போது தமிழில், ‘இடும்பன்காரி’ என்கிற படத்திலும், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்து வரும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தோட்டைவை தெறிக்கவிட தயாரானா ரம்யா பாண்டியன்.

நடிகை ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிப்பு.. மாடலிங் என கலக்கி வரும் ரம்யா பாண்டியன் தற்போது “தோட்டா” என்ற ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.. இந்த ஆல்பம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடித்துள்ள “தோட்டா” ஆல்பம் சாங் குறித்த போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தோட்டைவை தெறிக்கவிடவுள்ளார் ரம்யா பாண்டியன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …