தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் ( Ramya Pandiyan ). இவரது சிரிப்பாலும், பொறுமையாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ரம்யாவின் போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன் அப்பாவும் திரையுலகை சேர்ந்தவர் தானாம். அவரின் இறப்பை பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கூறியிருப்பார். சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.
அதனாலேயே அவர் படங்களில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.மேலும் அதன் பிறகே அவருக்கு ஜோக்கர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தேசிய விருதும் பெற்றது. ஆனால் ரம்யா பாண்டியனுக்கு அந்த அளவிற்கு எந்த புகழையும் தரவில்லை.
அதன் பிறகு சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை படத்தில் நடித்தார்.அப்பொழுது அவருக்கு குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது. சமையல் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தால் தான் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறினார்.
ஆனால் அது தான் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை பெற்று தந்தது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தினார். இதுவரையிலும் இல்லாத விதமாக இந்த புகைப்படங்கள் வைரலானது.
மேலும் அவர் குக் வித் கோமாளியின் நடந்துகொண்டது, அவரின் அந்த பொறுமை பலரையும் வியக்க வைத்தது.ஒவ்வொரு வாரமும் இவர் தான் பார்ட்னராக வர வேண்டும் என்று போட்டியாளர்கள் ஏங்கி தவித்தனர்.
அந்த அளவிற்கு இவரின் நடவடிக்கைகள் இருந்தது. இந்த குக் வித் கோமாளி மூலமே இவர் பிரபலமானார். அதன் மூலமே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இப்பொழுது பலரின் நெஞ்சத்தை கொள்ளைகொண்ட ரம்யா பிக் பாஸ் வீட்டில் கலக்கிக்கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.