காதல் ரோஜாவே… பாட்டு நெஞ்சத்தை அள்ளி சென்ற அரவிந்த்சாமியின் ரெண்டகம் டிரைலர்!

ரோஜா படத்தில் அறிமுக நாயகனான  அரவிந்த்சாமி அறிமுகமானார். இந்தப்படத்தின் மூலம் பெரும்பாலான பெண்களின் மிகப்பெரிய கனவு நாயகனாக வலம் வந்த இவர் இடையில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பிராந்திய தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.

பம்பாய், மின்சாரக்கனவு போன்ற படங்களில் பட்டையை கிளப்பிய இவர் இடையில் பிரேக் எடுத்த பின் கடல் என்ற  மணிரத்னம் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

 பின்னர் தமிழில் இவர் நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது.மீண்டும் பட வாய்ப்பு கிடைக்க வழி செய்தது.

 தற்போது இவர் மலையாள படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த படத்திற்கான டிரைலர் வெளிவந்துள்ளது அப்படத்தின் பெயர் என்னவென்றால் ரெண்டகம் ஆகும்.  இப்படத்தை பெலினி டிபி இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

 மேலும் இப்படத்தில் அரவிந்த்சாமி யோடு இணைந்து குஞ்சாக்கோ போபன்  என்ற மலையாள நடிகர் நடிக்க இப்படம் இரண்டு மொழிகளில் எடுக்கப்படுகிறது.போபன் தமிழுக்கு முதல் முதலாக இப்படத்தின் அறிமுகம் ஆகிறார்.

ரெண்டகம்   மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படம். இப்படம் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியாகிறது. மேலும் இதில், ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான  கதைக்களம் கொண்ட இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான படமாக அமையும் என  திரைப்பட குழுவில் இருக்கக்கூடிய அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள்.நடிகர் அரவிந்த்சாமிக்கு இந்த படம் கட்டாயம் மீண்டும் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தருவதோடு மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆக்கும்.

 இந்நிலையில் அரவிந்த சாமியின் வித்தியாசமான கெட்டப்பில் இந்தப்படத்தின்  டிரைலர் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதில் நிச்சயம் அரவிந்தசாமி மிகவும் நன்றாக நடித்திருப்பார் என்று டிரைலர் பார்த்தவுடன் கூறுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …