கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தடாலடியா சம்பளத்தை உயர்த்தினா எப்படி? தயாரிப்பாளர்களை கலங்கடித்திருக்கும் நடிகை ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, இந்தி என்று நான்கு மொழிகளிலும் மிக தீவிரமாக நடித்து வரக்கூடியவர். தற்போது தமிழில் நமது அண்ணன் தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

 இவர் ஆரம்ப நாட்களில் தனது படத்தின் சம்பளமாக வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டும் பெற்று வந்த நிலையில் இப்போது தனது சம்பளத்தை ஏற்றி இருப்பது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருப்பதோடு வேறு ஒரு நடிகையை தேடி போக வைத்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின்  திடீர் சம்பள உயர்வுக்கு காரணம் இவர் நடித்த புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றிதான் என்று கருதப்படுகிறது.

 அடுத்தடுத்த படங்கள் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இவரது சம்பளம் தற்போது நான்கு கோடியாக உயர்ந்துள்ளது இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் இவர் சம்பளத்தை பரவாயில்லை இல்லை என்றால் வேறு நடிகையை தான் நாம் தேடிப் பிடிக்க வேண்டும் என்று புலம்ப அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் பிடிவாதமாக இந்த சம்பளம்தான் தேவை என்று அவர் ஒற்றைக் காலில் நிற்கிறார்.

 இப்போது இவர் விஜய்யோடு நடித்து வரும் வாரிசு படம் வெளிவந்த பின்னர் மீண்டும் இந்த சம்பள உயர்வு இருக்குமா வெற்றி எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்கு நிச்சயமாக இவருடைய சம்பளம் வரும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறிவருகிறது.

 மேலும் இவருக்கு தற்போது இவர் கேட்ட நான்கு கோடி ரூபாயைக் கொடுத்து புஷ்பா 2 படத்துக்கு புக் செய்திருக்கிறார்கள் இனி இவர்கள் காட்டில் மழைதான் ஏற்கனவே பிடிவாதம் பிடித்து இருக்கக்கூடிய இவர் நிச்சயமாக விஜய் படம் எகிறினாள் சம்பளத்தையும் கட்டாயம் உயர்த்துவர்  என தெரிகிறது.

 நேரம் இவர் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதால் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள் இதோடு மட்டுமல்லாமல் விஜய் படம் வெற்றி கிடைத்தால் தமிழில் நம்பர் ஒன்றாக வலம் வருவேன் என்று மிகவும் நம்பிக்கையோடு இந்த நடிகை இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …