நிறுவனங்கள் அல்லது தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளாவதும், கலாய்க்கப்படுவதும் வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ஒரு விளம்பரம் ரசிகர்களை ஷாக்காக்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
தேன் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா. இதுல என்னப்பா சர்ச்சையை கண்டு புடிச்சாங்க என்று பார்த்தால்.. அந்த தேர் விளம்பரத்திற்கான இடத்தை தேர்வு செய்தது தான் இங்கே விஷயமே.
திருமண நிச்சயதார்த்தத்தில் அமர்ந்திருக்கும் நடிகை ராஷ்மிகாவிடம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணுக்கு கொண்டு வந்த தங்கத்தை எடுத்துட்டு வாங்க என்று ஆர்டர் போடுகிறார் புரோகிதர்.
உடனே, சிட்டாக பறந்து சென்ற மணமகனின் பாட்டி, பட்டு துணியால் மூடப்பட்ட ஒரு தட்டை எடுத்து வந்த ராஷ்மிகாவிடம் நீட்டுகிறார்.
ராஷ்மிகா அந்த பட்டு துணியை நீக்கி பார்த்ததும் உள்ளே தேன் பாட்டில் இருக்கிறது. இதை பார்த்து ஷாக் ஆனா மனமகன்.. பாட்டி தேன் எதுக்கு..? என்று கேட்கிறார்.
இதனை பார்த்த இணையவாசிகள் இந்த விளம்பரத்தை வச்சி செய்து கலாய் மீம்கள் பலவற்றையும் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
விளம்பரமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா என்று புலம்பி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.