கிளாமர் தூக்குது.. இதுவரை கட்டாத கவர்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா..!

சினிமாவில் அறிமுகமாகி குறைந்த நாட்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 1996 ஆம் ஆண்டு பிறந்த ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இளமை காலங்களிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம் இவரது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் விஜய் தேவர கொண்டாவிற்கு கதாநாயகியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா.

நல்ல வரவேற்பு:

கிட்டத்தட்ட மொத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரமாக ராஷ்மிகாதான் இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து ராஸ்மிகா பிரபலமான ஒரு நடிகையாக மாறினார்.

அதனை தொடர்ந்து தேவதாஸ், டியர் காம்ரேட், போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் முதன்முதலாக சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த பிறகு அவர் நடித்த புஷ்பா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

---- Advertisement ----

அந்த திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி என்கிற அவருடைய கதாபாத்திரமும் தனித்துவமான ஒரு கதாபாத்திரமாக இருந்து வந்தது. இதற்கு நடுவே நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இதன் மூலமாக இவர் அதிகமாக வருமானம் ஈட்டி வருவதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

பெரும் நடிகர்களுடன் வாய்ப்பு:

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் பெற்று வரும் ராஷ்மிகா வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவே நடித்திருந்தார். குறைந்த காலக்கட்டத்தில் பெரும் கதாநாயகர்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார் ராஷ்மிகா.

பாலிவுட்டில் அனிமல் என்கிற திரைப்படத்திலும் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கான வரவேற்பு என்பது இன்னும் அதிகரித்துள்ளது என்று கூற வேண்டும். இதற்கு நடுவே பாலிவுட் சென்ற ராஷ்மிகா அங்கு தென்னிந்திய சினிமா குறித்து சில சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசியிருந்தது சமீபத்தில் அதிக வைரலாகி வந்தது.

இது அவருக்கு தென்னிந்தியாவில் வரவேற்பை குறைக்கும் என்று பேச்சுக்கள் இருந்தாலும் கூட தொடர்ந்து அவர் தென்னிந்தியாவிலும் வரவேற்பை பெற்றுதான் வருகிறார்.

தமிழில் குபேரா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா தற்சமயம் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது

---- Advertisement ----