கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து ரசிகர்களின் மனம் கவந்த நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா .
இவர் முதன்முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். க்ரிக் பார்ட்டி இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் .
கன்னட படத்தில் ராஷ்மிகா மந்தனா:
முதல் படத்திலிருந்து ரசிகர்களின் எகோபித்த வரவேற்பு பெற்ற ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.
தெலுங்கு சினிமாவில் இவர் கீதா கோவிந்தம் திரைப்படம் மற்றும் டியர் காம்ரேட் உள்ளிட்ட தொடர்ச்சியாக விஜய் தேவர் கொண்டவுடன் சூப்பர்ஹிட் அடித்த திரைப்படங்களில் நடித்து வந்ததால் அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல் என அவர் ஒருபோதும் மறுப்பு செய்தி வெளியிட்டதே கிடையாது. இதனால், இவர்கள் காதல் உண்மை தான் போல என ரசிகர்களும் பேசத் தொடங்கினார்கள்.
இதனிடையே அவருக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்தும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தான் நேரடியாக தமிழ் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஹீரோயின்:
ஆனால் அதற்கு முன்னதாகவே கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பேமஸ் ஆனார் நடிகை ராஷ்மிகா.
தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை அந்தஸ்தை பிடித்த அவருக்கு பாலிவுட் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
இதனிடையே அவர் நேஷனல் கிரஷ் என இந்திய சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதனால் இவருக்கு பாலிவுட் சினிமாவில் அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
இவர் கடைசியாக அனிமல் திரைப்படத்தில் பிரபல நட்சத்திர ஹீரோவான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அனிமல் படத்தில் நடித்திருக்கக்கூடாது:
அந்த திரைப்படம் பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. ராஷ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கவே கூடாது.
ஆண் ஆதிக்கம் நிறைந்த இத்திரைப்படத்தில் ரஷ்மிகா நடித்திருப்பதை பலரும் விமர்சித்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் காட்சி ஒன்றை ரசிகை ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு
“ஆண்களை நம்பவே கூடாது” என கூறியுள்ளார்.
ராஷ்மிகாவின் பதிலடி:
அவரின் இந்த பதிவிற்கு பதில் கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, “திருத்தம்: முட்டாள் ஆண்களை நம்புவது பயங்கரமானது.
பல நல்ல ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களை நம்புவது ஸ்பெஷல் தான்” என ராஷ்மிகா பதிவிட்டு இருக்கிறார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.