அந்த நேரத்தில் ஆடையின்றி நடித்தேன்..- நிருபரின் கேள்விக்கு ராதிகா ஆப்தே அதிர்ச்சி பதில்..!

நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது சினிமாவில் ஆடை இல்லாமல் நடித்திருக்கிறீர்கள். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன..? ஆடை இன்றி நடிப்பதால் சமுதாயத்திற்கு நீங்கள் சொல்ல வரக்கூடிய கருத்து என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்வியை எதிர்பார்த்தே காத்துக் கொண்டிருந்தது போல நடிகை ராதிகா ஆப்தே தன்னுடைய பதிலை படபடவென சுட்டு தள்ளினார்.

நான் ஆடை இன்றி நடித்தேன் அதனால் சமூகம் கெடுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி என்றால் இதற்கு முன்பு வேறு யாருமே ஆடை இன்றி நடிக்கவில்லையா..? என்ற கேள்வி எழுப்பிய அவர்.

நான் உணவுக்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்த பொழுது.. என்னுடைய வீட்டின் வாடகையை கொடுக்க முடியாமல் என்னுடைய குடும்பம் தவித்துக் கொண்டிருந்த பொழுது.. என்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கடன் கேட்ட பொழுது.. எங்களுக்கு உதவாத இந்த சமூகம்.

நான் சினிமாவில் நடித்து பிரபலமான பிறகு இப்படி நடித்து விட்டேன் அப்படி நடித்து விட்டேன் என்று குறை கூறுவதற்கு மட்டும் வருகிறது.

சினிமா தான் என்னுடைய வாழ்க்கைக்கு அஸ்திவாரம். சினிமாவால் தான் என்னுடைய குடும்பம் என்று இந்த உலகில் இருக்கிறது.

எனக்கு உயிர் கொடுத்தது சினிமா, ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் விறகு வாங்க கூட காசு இல்லாமல் மெழுகுவர்த்தியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி எரிய வைத்து சமைத்து சாப்பிட்ட காலங்கள் எல்லாம் நானும் என் குடும்பமும் அனுபவித்து இருக்கிறோம்.

எங்கள் கண்களில் ரத்தக்கண்ணீர் வராத குறை தான். அவ்வளவு கொடுமைகளை வாழ்க்கை எங்களுக்கு காட்டி இருக்கிறது.

அந்த நேரத்தில் என்னை கை கொடுத்து தூக்கி விட்டது சினிமா. அந்த சினிமாவுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என கூறியிருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …