சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்தவர் ரவீனா தாஹா. இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய நான்கு வயதில் இருந்தே சீரியலில் நடித்து வரும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, சாந்தி நிலையம், பைரவி, ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.
நடிகர் விஜய்யின் ஜில்லா, ஜீவா, பூஜை, கன்னக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். ஆனாலும், ரசிகர்களுக்கு இவரை மிகவும் பரிச்சயமாக்கிய ஒரு படம் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் என்ற திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் ஆசிரியர் ஒருவரின் தவறான நடவடிக்கைக்கு உள்ளாக மாணவியாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றார் ரவீனா. தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌன ராகம் என்ற சீரியலில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கக்கூடிய ஒரு ஆசாமி.
இவர் வெளியிடக்கூடிய புகைப் படங்களை பார்ப்பதற்கு எனவே ரசிகர் பட்டாளமே அவரை பின் தொடர்ந்து வருகிறது. மேலும், இவர் வயதுக்கு மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகிறார். பிஞ்சிலேயே பழுத்து விட்டது என்று கூட ரசிகர்கள் பலரும் இவரை வீளாசுவது உண்டு.
ஆனாலும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நடிகை ரவீனா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.