நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான் அதன் பிறகு திரைப்படங்கள் ஆல்பம் பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய நான்கு வருட காதலரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உங்களிடம் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா..? உங்களுடைய வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை ரெபா மோனிகா, நானும் என் கணவரும் நான்கு ஆண்டு நெருக்கமாக பழகி வந்தோம்., அதன்பிறகு தான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.
அவருடைய குடும்பமும் என்னுடைய குடும்பமும் நல்ல நெருக்கமான குடும்பம். எனவே புதிதாக ஒன்றுமில்லை.. பெரிய மாற்றங்கள் எதையும் நான் உணரவில்லை என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து பொதுவாக தன்னுடைய காதலியோ.. மனைவியோ திரைப்படங்களில் வேறு ஒருவருடன் ரொமான்ஸ் செய்யும்பொழுது ஒரு பொசசிவ்னஸ் இருக்கும் அப்படி உங்களுடைய கணவர் ஏதாவது விதிமுறை அல்லது கட்டுப்பாடு விதித்திருக்கிறாரா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரெபா மோனிகா ஜான் பொசசிவ்னஸ் என்பது இயற்கை. அதை இல்லை என்று மறுப்பதற்கு இல்லை. என்னுடைய கணவருக்கு பொசசிவ்னஸ் இருக்கிறது.
ஆனால் நீ இந்த அளவுக்கு தான் நடிக்க வேண்டும். இதற்கு மேல் நடிக்க கூடாது என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் அவர் எனக்கு விதித்தது கிடையாது.
ஆனால் எனக்கு என்னுடைய லிமிட் என்ன..? என்று எனக்கு தெரியும். என்னுடைய லிமிட்டுக்குள் எப்படியான காட்சியாக இருந்தாலும் நடிப்பேன். என்னுடைய லிமிட் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவருக்கும் அது முகசூழிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றால் போதும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அவருக்கு பொசசிவ்னஸ் இருக்கிறது. ஆனால், என்னிடம் அவருடைய கருத்து எதையும் திணித்தது கிடையாது. எல்லோருக்குமே பொசசிவ்னஸ் இருக்கும் அவருக்கு இல்லை என்று என்னால் பொய் சொல்ல முடியாது. மற்றபடி, என்னுடைய ரொமான்ஸ் காட்சிகளை பார்க்கும் போது என்னை கலாய்க்கத்தான் செய்வார் என்று கூறியுள்ளார் ரெபா மோனிகா.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.