தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய கதாநாயகிகளில் ரீமா சென்னுக்கு ( Reema Sen ) ஒரு தனி இடம் உண்டு. வந்த புதிதிலேயே ரசிகர்களை கவர்ந்து மளமளவென பல படங்களில் நடித்தார்.
விஜய்யுடன் பகவதி, அர்ஜுனுடன் கிரி என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்ததால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
மார்க்கெட் குறைந்த உடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். வழக்கமாக அனைத்து ஹீரோயின்களும் செய்யும் வேலைதான். ஆனால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ரீமா சென்.
அப்படி ரீமாசென் நடித்த முதல் படமான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்புர் (Gangs of Wasseypur) படுக்கையறை காட்சியில் மிரள வைத்தார். அதுவும் உச்சமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்படி நடித்ததால் அதன்பிறகு ரீமாசென்னுகும் அவரது கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் ரீமா சென்.
இந்த நேரத்தில் ரீமாசென் தன்னுடைய கணவருடன் குடி போதையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.