ஒரு பெண் என்னுடைய அந்த இடத்தில் முத்தம் கொடுத்தார்.. கூச்சமே இல்லாமல் கூறிய ரெஜினா..!

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா சமீபத்தில் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் ரெஜினா தற்போது நடிகை நிவேதா தாமஸ் உடன் இணைந்து சாகினி தாகினி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகை ரெஜினா சர்ச்சையான பல கருத்துக்களை கூறிவருகிறார்.

அந்த வகையில், தற்போது தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, என்னுடைய முதல் லிப் லாக் முத்தம் குறித்த அனுபவத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு சமயம் ஒரு பெண் திடீரென என் கன்னத்தை பிடித்து இழுத்து இரண்டு கன்னத்தையும் இறுக்கமாக பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார்.

இதனால் நான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். ஒரு பெண் என்பதால் அவரை நான் தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்தால் கண்டிப்பாக அறைந்து இருப்பேன் என்கிறார் நடிகை ரெஜினா.

சக பெண் ஒருவரால் சங்கடத்திற்கு உள்ளான நடிகை ரெஜினா இப்படி அதனை கூச்சமே இல்லாமல் வெளியில் சொல்லி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …