நடிகை ரெஜினா (Regina Cassandra), தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாரு ஐட்டம் சாங்கிற்கும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.சின்ன பாப்பாவாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இப்பொழுது கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா.
குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் ரெஜினா நடித்து வர படப்பிடிப்பில் அருண் விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இந்த நிலையில் இப்பொழுது மிடுக்கான உடையில் கேசுவல் போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள ரெஜினாவின் புகைப்படத்தை பார்த்த இளம் நடிகர் ஒருவர் கலாய்த்து உள்ளார்.
” எம்புட்டு இருக்குது ஆசை” பாடலில் கவர்ச்சி ததும்ப ததும்ப நடித்து ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த நடிகை ரெஜினா கெஸன்ட்ரா அதைப் போலவே தெலுங்கிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் இப்பொழுது விஷாலின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் சக்ரா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், வில்லி வேடங்களிலும் தைரியமாக நடித்து அசத்துகிறார்.சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அடுத்ததாக அருண்விஜய்யின் பார்டர் படத்திலும் எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ரெஜினா, தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாரு ஐட்டம் சாங்கிற்கும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது அதே பாணியில் தெலுங்கு சூப்பர்ஸ்ட சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரெஜினா.
சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ததும்ப அவர் ஆடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது.