தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை ரெஜினா பட வாய்ப்புக்காக படுக்கையை அழைத்த சம்பவம் குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.
சமீபகாலமாக நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரெஜினாவும் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மாடலிங் துறையில் இருந்த என்னிடம் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 19 வயது தான் ஆகியிருந்தது.
படத்தில் நடிக்க வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் நீங்கள் நடிக்க சம்மதமா..? சம்மதம் என்றாள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
திரும்பத் திரும்ப ஒரு நான்கைந்து முறை அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை உபயோகித்தார். அப்பொழுது அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் என்ன என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.
படங்களில் நடிப்பதற்கு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு என்னுடைய தோழிகளுடன் கலந்துரையாடிய பிறகுதான் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரிந்தது.
அதன் பிறகு அடுத்த முறை அவர் போன் செய்தபோது அந்த போனை கட் செய்து விட்டேன். அதன் பிறகு இப்படியான நிகழ்வு என்னுடைய வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இப்படியான விஷயங்கள் சினிமா துறையில் மட்டுமல்ல பெண்கள் பணியாற்றக்கூடிய பல துறைகளிலும் நடந்து வருகின்றது.
சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டால் கூட இப்படி ஒரு கதை இருக்கும். பெண்கள் இவ்வாறான விஷயங்களுக்கு அடிபணிந்து போக வேண்டிய அவசியம் கிடையாது என்று போட்டு உடைத்துள்ளார் நடிகை ரெஜினா. இவர், கூறியுள்ள இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.