தெய்வமகள் என்ற சீரியலில் வில்லியாகவும் கதாநாயகனுக்கு அண்ணி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அண்ணியார் என்று பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.
சீரியல் கதாநாயகன் இவரை எப்போதுமே அண்ணியாரே அண்ணியாரே என்றுதான் அழைப்பார். எனவே இவர் ரசிகர்கள் மத்தியில் அண்ணியார் என்று பிரபலமாகிவிட்டார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது நடிகை வாணி போஜனை முன்பு போல இப்போது சந்திக்கவே முடிவதில்லை.
சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தினமும் சந்திப்போம். ஆனால் இப்போது சந்திப்பதே கடினமாகிவிட்டது. அவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவரை குறை சொல்வதற்கு எதுவும் கிடையாது. ஒரு முறையை சென்னை வந்திருந்தேன். படப்பிடிப்பு எதுவும் இல்லை. சீரியல் நண்பர்களுக்கு போன் செய்து சந்திக்க அழைத்தேன். அனைவரும் சந்தித்தோம்.
அப்போது வாணி போஜனுக்கும் அழைப்பு விடுத்தேன். அவர் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் என்னால் வர முடியாது மன்னித்து விடுங்கள் என்று கூறினார். இது திட்டமிடப்படாத ஒரு சந்திப்பு என்பதால் வாணி போஜனை குறை சொல்வதற்கு இல்லை.
சீரியலில் நடிக்க அறிமுகமான போது ஒல்லியாக இருந்தேன். அதனால் பல சீரியல் வாய்ப்புகளை தவறாக தவற விட்டிருக்கிறேன். வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனவே உள்ள வில்லி கதாபாத்திரம் என்றால் உடனே ஏற்றுக் கொள்வேன். அவர்கள் சொல்வதை தான் நான் நடிக்கிறேன்.
ஆனால் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு, கதையை பார்த்துவிட்டு. என்னை தனிப்பட்ட முறையில் இணைய பக்கங்களில் ரசிகர்கள் திட்ட ஆரம்பித்தார்கள்.
இது பற்றியெல்லாம் என்னுடைய கணவருக்கே தெரியும். அவரிடமே நான் காட்டுவேன் பாருங்கள் எப்படி எல்லாம் திட்டுகிறார்கள் என்று. அவரும் சினிமா துறையில் இருப்பதால் இது பற்றி எல்லாம் அவருக்கு தெரியும்.. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறி எனக்கு ஆதரவாக இருப்பார் என்று கூறியுள்ளார் ரேகா கிருஷ்ணப்பா.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.