Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அந்த நேரத்துல புருஷன் விட்டுட்டு ஓடிட்டாரு.. அந்தரங்க உறுப்பில் ரத்தம்.. ரேஷ்மா பசுபுலேட்டி கூறிய பகீர் தகவல்..!

சின்ன திரையில் சக்கை போடு போட்டு வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடிகர் பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினர். இவரது தந்தையும் திரை உலகில் பணி புரிந்தவர் என்பதால் இவருக்கு திரை உலகப் பிரவேசம் எளிமையாக இருந்தது.

தற்போது சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டிலும் கண்ணும் கருத்துமாக நடித்து வரும் இவர் சினிமாவில் கிடைத்த புகழை விட சின்னத்திரையில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

சின்னத்திரையை பொறுத்த வரை நடிகை ரேஷ்மா பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததின் மூலம் தான் பெருவாரியான தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. 

---- Advertisement ----

இதனால் இணைய தள பக்கங்களில் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது.

திரைப்படங்களைப் பொறுத்த வரை வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அந்தரங்க உறுப்பில் ரத்தம்..

சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பது போலவே அடிக்கடி பல தனியார் சேனல்களுக்கும் youtube சேனல்களுக்கும் பேட்டிகளை தந்து பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.

இந்த வகையில் இவர் தனது எதார்த்த வாழ்க்கையை குறித்து எப்போதும் மனம் திறந்து பேசக் கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி வெளிப்படையாக பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

இதற்கு காரணம் திருமணமாகி தற்போது கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழக்கூடிய இவர் திருமணம் ஆன சமயத்தில் இவரது கணவர் தன்னை அடித்த போது தன் வயிற்றில் இருந்த நான்கு மாத குழந்தை அப்படியே வெளியே வந்து விட்டது என்ற பகீர் தகவலை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து விட்டுட்டு போன புருஷன்..

மேலும் பாக்ஸரான தனது கணவர் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் நான்கு மாத குழந்தை வெளியே வந்ததை பார்த்து பயந்து போய் என்னை விட்டு விட்டு அப்படியே ஓடி விட்டார் என்ற விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தனது முதல் குழந்தையை ஒன்பது மாதம் வரை இன்குபேட்டரில் வைத்திருந்த விஷயத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களையும் சொல்லி அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

பிரபலமாக இருக்கும் ஒரு நடிகைக்கு இது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடிய நேரத்தில் சாமானிய பெண்களின் நிலைமை எப்படி இருக்கும் என இரண்டையும் ஒப்பீடு செய்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் அவர்கள் மத்தியில் இன்னும் பெண்களுக்கு உரிய அந்தஸ்தை கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top