எகிறி அடிக்கும் விலைவாசி

 எப்போதும் இல்லாத அளவு தக்காளி முதல் கொண்டு பெட்ரோல் வரை விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. இந்த விலைவாசி எப்போது குறையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் காலங்களில் இந்த விலைவாசி மேலும் ஏறி அடிக்குமா? என்ற சந்தேகத்தில் மக்கள் விழிபிதுங்கி இருக்கிறார்கள்.

விலை வாசி ஏற காரணம்

விலைவாசி உயர்வுக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தான். இதனை கட்டுக்குள் வைத்திருந்தால் மற்ற பொருட்களின் விலையை குறைத்து விடலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டாலே அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அனைவரும் ஏற்று விடுகிறார்கள் இதன் காரணத்தினால் விலைவாசி உயர்வை நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் திடீரென்று எகிறி அடித்த வெங்காயத்தின் விலை, தக்காளியின் விலை இவற்றையெல்லாம் இதற்கு உதாரணமாக நாம் கூறலாம்.

இந்த பெட்ரோல், டீசல்விலை உயர்வு நடுத்தர மக்களையும், ஏழை மக்களையும் மிக அதிகமாக பாதித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை அடுத்து, உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆசிய நாடுகளில் இந்தியா அளவுக்கு எந்த நாட்டிலும் விலை உயர்வு இல்லை.

பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.33-ம், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.32-ம் மேல்வரி விதிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி வசூலிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

எப்போது விலை வாசி குறையும்

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள மேல் வரியை ரத்து செய்தாலே அனைத்து பொருட்களின் விலைவாசி கட்டுக்குள் வரும் என்பது நிதர்சன உண்மை.

ஒருவர் மீது ஒருவர் குறை கூறாமல் நாட்டு மக்களின் மீது கவனத்தைச் செலுத்தினால் நிச்சயமாக இந்த விலைவாசி உயர்வைக் எந்த ஒரு அரசியல்வாதிகளாலும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …