என்னது லீக் ஆனதா மார்பிங் போட்டோஸ்… கவலையில் பிரபல நடிகை ரோஜா குடும்பம்…!!

தற்போது ஆந்திராவில்  அமைச்சராக திகழக்கூடிய நடிகை ரோஜா செல்வமணி தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அவதூறுகள் பற்றி  வேதனையாக பேசியிருக்கிறார்.

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் மேலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். இவர் ரசிகர்களில் கனவு கன்னியாக திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

 ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு இவர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு இயக்குனர்.

 இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டியதால்  1999 தெலுங்கு தேசிய கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

 2009 ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகிய ரோஜா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்எல்ஏவாக மாறினார். மேலும் இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது ஆந்திராவில் சுற்றுலா மற்றும் இளைஞர் நல அமைச்சராக திகழ்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்ட போதும் தற்போது சமூக வலைத்தளங்களில் தன் குடும்பத்தார் மீதும் தன் மீதும் அவதூறான செய்திகள் பரவி வருவது வேதனையாக உள்ளது என்று கூறினார்.

 அதுமட்டுமில்லாமல் பிறந்த நாளில் தனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாகி அசிங்கப்படுத்தி தனது மகளின் போட்டோவை மாப்பிங் செய்து தன்னைப் பற்றிய ஆபாச படங்களை வெளியிட்டதை அடுத்து எனது மகள் மிகவும் கவலை பட்டால் என்னும் இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் எனது மகளை பிரபலங்களுக்கு நடக்கக்கூடிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

இதையும் நாம் சமாளித்த தான் முன்னேற முடியும் எனவே இது போன்ற அவதூறுகளை நம்பி நாம் அப்படியே முடங்கிவிடக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …