Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அடுத்த சத்குரு யார்..? போட்டி போடும் விஜய், அஜித் பட நடிகைகள்..? ஓவர் நைட்டில் ஏற்பட்ட மாற்றம்..!

இப்போதெல்லாம் பெரிய செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், நடிகர் நடிகையர், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் யாரேனும் ஒரு சாமியாரை தங்களது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் சொல்லும் தத்துவங்களை, போதனைகளை பின்பற்றி நடக்கின்றனர். யோகா, தியானம் போன்ற பயிற்சி முறைகளை கற்றுக்கொள்கின்றனர்.

அந்த வகையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி, விசிறி சாமியார் யோகி ராம்சுரத்குமார், ஈஷா யோக மையம் சத்குரு ஜக்கி வாசுதேவ், வாழும் கலை ரவிசங்கர்ஜி, அமிர்தானந்தமாயி, சாய்பாபா, கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சாமியார் என குறிப்பிட்ட சிலரை தங்களது குருவாக ஏற்றுக்கொண்டு வாழும் சீடர்கள்தான் அதிகம்.

சத்குரு ஜக்கி வாசுதேவ்

அதிலும் ஈஷா யோகா மையத்தை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு கார்ப்பரேட் சாமியார் என்ற பெயரும் உண்டு. இவர் மற்ற சாமியார்களை போல, காவி உடை தரிக்க மாட்டார். எந்நேரமும் மவுனமாக இருக்க மாட்டார். பிராண்டட் பேண்ட், ஷர்ட் கான்வாஷ் ஷூ அணிந்துக்கொண்டு, கூலிங்கிளாஸ் போட்டபடி பைக்குகளில் பறப்பார். கார்களை மிக வேகமாக ஓட்டுவார். கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவார்.

ஈஷா யோகா மையம்

அடிக்கடி போதனை வகுப்புகளை நடத்துவார். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல ஆயிர ஏக்கர் பரப்பளவில் இவரது ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. மிக உயரமான ஆதியோகி சிலையை இங்கு சத்குரு வடிவமைத்துள்ளார்.

---- Advertisement ----

மகாசிவராத்திரி

ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள், ஈஷாவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான சீடர்கள் இங்கு திரண்டுவிடுவர். அன்று இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என அந்த மையமே திருவிழா கோலம் பூண்டுவிடும்.

இதையும் படியுங்கள்: சிறப்பான உடலுறவு இதற்கு நிகரானது.. துளியும் வெக்கமில்லாமல் ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்..!

இந்த மகாசிவராத்திரி விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகளை இங்கு காண முடியும். குறிப்பாக இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், சேரன், பார்த்திபன், சந்தானம், கேஎஸ் ரவிக்குமார், மறைந்த நடிகர் விவேக், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ரேயா சரண் என ஏராளமான நடிகர், நடிகைகள் இந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துக்கொள்வது வழக்கம்.

தனிப்பட்ட முறையில் சத்குரு ஜக்கி தேவ் பங்கேற்கும் நேர்காணல்களில் அவர்கள் பங்கேற்று கேள்வி கேட்டு, அதற்கு சத்குரு அளிக்கும் பதில்கள் அடங்கிய அந்த வீடியோ காட்சிகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றன.

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில்…

ஈஷா யோக மையம் சத்குரு ஜக்கி வாசுதேவ், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டு, தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

இதையும் படியுங்கள்: 16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!

இந்நிலையில், அடுத்த சத்குரு யார் என்ற போட்டியில் விஜய், அஜித் பட நடிகைகள் இருக்கிறார்கள் என விபரங்கள் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

சத்குருவாக மாற முயற்சி

அந்த வகையில், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் அடுத்த சத்குருவாக மாற முயற்சி செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இதற்காக திருமணத்தை துறக்கவும் தயாராக இருக்கிறார் தமன்னா என்று கூட கூறுகிறார்கள். இந்த விபரம் இணைய வாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த சத்குரு யார் என்பதில் போட்டி போடும் விஜய், அஜித் பட நடிகைகளால் சமூகவலைதளங்களில் அனல் பறக்கிறது. ஓவர் நைட்டில் ஏற்பட்ட மாற்றத்தால், சத்குருவின் சீடர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். ஆனால் சத்குருவுக்கு ராதே என்ற மகள் அவரது ரத்த சம்பந்த வாரிசாக இருக்கிறார் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top