Breaking News

பொண்ணுங்களை தான் சைட் அடிப்பேன்.. – அதுவும் அந்த விஷயத்தை பாத்து பாத்து ரசிப்பேன்..!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. தமிழிலும் பிரேமம் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சாய் பல்லவி.

இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்த அவர், பின்னர் செல்வராகவன் இயக்கிய என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.

பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் கூட இவர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்த ஷ்யாம் ஷிங்கா ராய் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் விராட பருவம் திரைப்படம் தயாராகி உள்ளது. ராணா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை பிரியாமணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் சாய் பல்லவி தனக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. நான் பெண்களைத்தான் அதிகமாக சைட் அடிப்பேன். அவர்கள் போடும் உடை, அலங்காரம் மற்றும் முடி என அனைத்தையும் நான் பாத்து பாத்து ரசிப்பேன். பசங்க அதே ஷர்ட், பேண்ட் தான் என்பதனால் பெரிதாக பசங்கள சைட் அடித்தது இல்லை.

பெரும்பாலும் பொண்ணுங்களை தான் சைட் அடிப்பேன். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் எனக்கு இது வரைக்கும் நம்பிக்கை இல்லை அந்த மாதிரி யாரும் என்னை இம்ப்ரஸ் செய்ததும் இல்லை என சாய்பல்லவி வெளிப்படையாக கூறியுள்ளார்.

---- Advertisement ----

Check Also

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

தமிழ் செய்தி தொகுப்பாளரும், தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை அனிதா சம்பத் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய …