தென்னிந்திய மொழிகளில் முன்னணியில் இருக்கும் நாயகிகளின் வரிசையில் இருக்கக்கூடிய சாய் பல்லவி தன்னுடைய குடும்பத்தாருடன் பாரம்பரிய முறை படி படுகா இன உடை அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நடிப்பில் களை கட்டுவதற்கு முன்பு சின்னத்திரையில் நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
மேலும் இவர் சிறு வயதிலிருந்தே நடனத்தின் மேல் தீராத காதல் கொண்டிருந்த காரணத்தினால் எந்தவிதமான நடன பயிற்சி மையத்திற்கும் செல்லாமலேயே ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சத் போன்ற நடிகைகளின் நடனத்தை பார்த்தே நடனத்தை கற்றுக் கொண்டவர்.
நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் படு சுட்டியான இவர் ஜார்ஜிகாவில் இதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டத்தை பெற்றிருக்கிறார். பிரேமம் என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததன் மூலம் அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட இவர் அவரின் நடிப்பில் எதார்த்தத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றார்.
முதல் படமே வெற்றி அடைத்ததை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பெருமளவு பேசப்பட்டது. அதிக மேக்கப் இல்லாத அளவு சிவந்த நிறத்தில் இருக்கும் இவரது முகம் பார்ப்பதற்கு பழகத் தூண்டும் விதத்தில் இருப்பதால் இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது.
மேலும் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் அடுத்தடுத்து கிட்டை கொடுத்து இருப்பதால் பிஸியான நடிகையாக மாறிய இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படம் வைரலாகி உள்ளது.
கோத்தகிரி பகுதியில் உள்ள படுகா இனத்தைச் சேர்ந்தவர் தன்னுடைய பாரம்பரிய உடையில் குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த இனத்திலிருந்து முதல் முறையாக திரை உலகில் நுழைந்து சாதனைகள் பல படைத்து வரும் படுகாயின பெண் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.