அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. ரகசியம் உடைத்த சாய் பல்லவி..

அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. ரகசியம் உடைத்த சாய் பல்லவி..

மிகச்சிறந்த நடன கலைஞரான சாய் பல்லவி 2015 ஆம் ஆண்டு வெளி வந்த மாபெரும் வெற்றி படமான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் பலரும் இவர் மீது பிரியம் கொண்டார்கள்.

அது மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு வெளி வந்த கலி திரைப்படத்தில் துல்கர் சல்மானோடு இணைந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2017 தெலுங்கு திரைப்பட உலகில் நடிக்கக் கூடிய வாய்ப்பு தேடி வந்தது.

நடிகை சாய் பல்லவி..

நடிகை சாய் பல்லவி படுகர் இனத்தைச் சேர்ந்த பெண். இவரது சொந்த ஊர் கோயமுத்தூர். டாக்டர் படிப்பினை படித்திருப்பது பலருக்கும் தெரியலாம். இவருடைய தாய் மொழியாக படுக மொழி திகழ்கிறது.


இதையும் படிங்க: பின்னால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.. படுக்கையில் ராஷி கண்ணா ஸ்டன்னிங் போஸ்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி வரும் சாய் பல்லவி கரு என்ற தமிழ் திரைப்படத்தில் முதல் முதலாக துளசி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து மாரி படத்தில் ஆனந்தியாக சீரிய நடிப்பை வெளிப்படுத்திய இவர் என் ஜி கே படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் 2022 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கார்கி திரைப்படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முகப்பரு நீங்க தேனூற்றி மசாஜ்..

சினிமாவில் நடித்தாலும் அதிகளவு மேக்கப் போடாமல் இயற்கை அழகோடு பாரம்பரிய உடைகளை உடுத்தி அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் சிறப்பாக தன்னுடைய செயலினை வெளிப்படுத்தக் கூடிய சாய் பல்லவி தன் முக பளபளப்புக்கான ரகசியத்தையும், முகப்பரு ஏற்படாமல் இருந்ததற்கான காரணத்தையும் அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.


அந்த வகையில் சாய் பல்லவிக்கு முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் மஞ்சளை பயன்படுத்துவதாக கூறியதோடு மூக்குக்கு கீழ் இருக்கும் அந்த பூனை முடிகள் நீங்க இது உதவி செய்யும் என்று அவர் அம்மா கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் முகம் முழுவதும் தேனை தடவி மசாஜ் செய்து விடுவதின் காரணத்தால் தான் முகம் அழகாக பளப்பளவென்று உள்ளதாக கருத்துக்களை கூறியிருக்கக்கூடிய இவர் முகப்பரு நீங்க அவ்வப்போது தயிரையும் முகத்தில் பூசி விடுவதாக கூறியிருக்கிறார்.


முக ஜொலிப்பு ரகசியம்..

இதனை அடுத்து மஞ்சள், தேன் மற்றும் தயிரினை பயன்படுத்துவதால் தான் இவரது முகப்பருக்கள் முகத்தில் அதிகம் ஏற்பட்டாலும் வடுக்கள் ஏதும் விழாமல் எளிதில் மறைந்து விடுகிறது என்ற ரகசியத்தை தெரிந்து கொண்ட ரசிகைகள் பலரும் இதை ஃபாலோ செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?

எனவே முக அழகில் கவனத்தை செலுத்தக்கூடிய அனைவரும் இனி முகத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை மஞ்சள், தயிர் மற்றும் தேனை பயன்படுத்துவதன் மூலம் சாய் பல்லவி அளவிற்கு முக ஜொலி ஜொலிப்பை பெற முடியும்.

தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு சாய் பல்லவியின் அழகின் ரகசியம் இதுதானா? என்று அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. இயற்கை பொருட்களைக் கொண்டு இவர் இந்த அளவு தன் முக அழகை பாதுகாக்கிறார் என்பதை புரிந்து கொண்ட பலரும் செயற்கை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்கள்.