என்ன… சொல்ல முடியாத தோல் வியாதி நடிகை சமந்தாவுக்கா? – விளக்கம் தந்த மேலாளர் மகேந்திரா!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் முன்னால் மருமகளான சமந்தா, தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை தற்போது விவாகரத்து செய்துவிட்டு சினிமாவில் அதிக  கன்சன்ட்ரேஷன் செய்கிறார்.

இவரும் நயன்தாராவை போல் நடிப்பில் ஜொலித்து தமிழ்’,தெலுங்கு, மலையாளம்  பல மொழிகளில் பிஸியாக  தற்போது நடித்து வருகிறார்.

 நடிப்பை மட்டும் டிசி அல்ல இன்ஸ்டாகிராம் இடம் எப்போதும் மிகவும் ஆக்டிவாக செயல்படக்கூடிய இவர் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக பதிவு செய்து கமெண்ட்டுகளை அள்ளி குவிப்பார்.

 தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் அதிக பதிவுகளை போடாமல் சற்றே ஒதுங்கி இருப்பதற்கு காரணம் என்ன என்று  ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி வருகிறார்கள்.

 நடிகை சமந்தாவிற்கு  தோல் வியாதி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தான் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாக சில வதந்திகள் பரவி வருகிறது. மேலும் தோல் வியாதியின் மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அங்கு சென்று அதற்கு தக்க சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் திரும்புவார் என்ற  செய்திகள் பல வந்து உள்ளது.

 வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவின் மேலாளராக மகேந்திரா  பதில் அளித்து இருக்கிறார்.

 தொடர்ந்து ஒரு நேர்காணலில் பேசிய இவர் மேலாளரான மகேந்திரா சமந்தாவின் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்த விதமான தோல் வியாதிகள் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறியதோடு தற்போது அவர் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருக்கிறார் என்றார்.

 சமந்தாவின் யசோதா படமானது வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திரைக்கு வெளிவந்துவிடும் என்றும் தற்போது அவர் குஷி படத்தில் குஷியாக நடித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

 எனவே வீண் வதந்திகளை யாரும் நம்பி அதுபற்றிய கமெண்டுகளை நீங்கள் போட்டு கேள்விகளை சமந்தாவிடம் எழுப்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …