அதே டெய்லர்… அதே வாடகை.. சேம் பிஞ்ச் பண்ணும் கீர்த்தி சுரேஷ் சமந்தா..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது அது இல்ல என்று கோவில் பட வடிவேலு பாணியில் நடிகை சமந்தா அணிந்த உடைதானே இது என்று கலாய்த்து வருகிறார்கள்.

ஆம் அது உண்மைதான். ஆனால் நடிகை சமந்தா அணிந்து வந்த அதே உடையா..? என்பது தெரியாது. நடிகை சமந்தா அணிந்து வந்த அதே கலரில்.. அதே டிசைனில்.. அதே அளவில் இருக்கும் உடையை அணிந்து கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார்.

கடந்த வருடமே நடிகை சமந்தா இப்படியான இந்த உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அதை உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதே டெய்லர்.. அதே வாடகை.. என்று வெற்றிக்கொடிகட்டு பார்த்திபன் பாணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில நேரங்களில் சில தருணங்களில் ஒரே மாதிரியான உடையை வெவ்வேறு நடிகைகள் அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.

அனேகமாக ஒரே காஸ்ட்யூம் டிசைனராக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் ஒரு உடையை தயாரிக்க லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் காஸ்ட்யூம் டிசைனர்கள் இப்படி ஒரே உடைய இரண்டு நடிகைகளுக்கு கொடுத்து பணம் பார்ப்பார்களா..? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

எது எப்படியே… பிஞ்ச் பண்றதுல சமந்தாவை அடிச்சுக்க ஆளே இல்லை.. ஆளு மாத்தி ஆளு சேம் பிஞ்ச் சொல்லிட்டு ஆளுக்கு ஒரு சாக்லேட்டை வாயில போட்டுக்கிட்டு போய் பொழப்பு தொளப்பை பாருங்க என்று இந்த விவகாரத்திற்கு தீர்வு சொல்கிறார்கள் இணையதள நாட்டாமைகள்.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …