“அவ என்ன டைவர்ஸ் பண்ணிட்டு போயிட்டான்னு இருக்கேன்.. ஆனா நீ..” – ஒரு அப்பன் செய்ற வேலையா இது..? – தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் புஷ்பா. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருக்கிறார்.

இந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவள்ளி, சாமி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது.

யூடியூபில் இதுவரை அந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.தமிழ் பதிப்பில் இந்த பாடலை விவேகா எழுத ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு தற்போது ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, சமந்தா கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இந்த பாடல் குறித்த மீம்களும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

அதிலும், புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை மிகவும் சிறப்பாக உள்ளது. படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகர்ஜுனா கூறியது ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது.

இதனை கொண்டு, அவ என்னை டைவர்ஸ் பண்ணிட்டு போயிட்டாளேன்னு இருக்கே.. ஆனா நீ இந்த பாடலை லூப் மோட்ல கேட்டுட்டு இருக்க.. ஒரு அப்பன் பண்ற காரியமா இது..? என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …