வெளியானது சென்சார் செய்யப்படாத “ஊம் சொல்றியா மாமா” பாடலின் வீடியோ..! – திணறும் இன்டர்நெட்..!

அல்லு அர்ஜுன் – ஃபகத் ஃபாசில் – ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கிய ’புஷ்பா’ கடந்த மாதம் 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இசைதான் ’புஷ்பா’ படத்தின் உண்மையான ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

ஆனால், இந்த பாடலின் வீடியோவில் சில இடங்களில் சென்சார் செய்து தான் திரையரங்கில் ரிலீஸ் செய்தார்கள். சமந்தாவின் அழகை பார்க்க இந்த பாடலின் சென்சார் செய்யாத வீடியோவுக்காக காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து, படம் OTT-யில் வெளியான நாளான்று மாலை வெளியிடப்படும் என பதில் கொடுத்திருந்தது படக்குழு.

இந்நிலையில், இன்று புஷ்பா திரைப்படம் OTT-யில் வெளியானது. எனவே சற்று முன் இந்த பாடலின் சென்சார் செய்யப்படாத வீடியோ இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்றது.

---- Advertisement ----

---- Advertisement ----