“தன்னுடைய ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரசிகர்கள்….” – பரவசமடைந்த சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க…!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ நேற்று உலகம் முழுக்க வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஊடகங்களின் விமர்சனங்கள் ’சுமார்’ என்று வந்தாலும் ரசிகர்கள் ’சூப்பர்’ என்று கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானாலும் அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார்.

ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கியது.இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுள்ளது.ஆனால் இந்த பாடலுக்கு ரசிகர்களின் வரவேற்பு தாறுமாறாக உள்ளது.

திரையரங்குளில் வெளியனா புஷ்பா படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் அங்கு சமந்தா பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். இந்த வீடியோக்களை சமந்தா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு …