என் இதயமே நொறுங்கிடுச்சு.. சமந்தாவின் பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

என் இதயமே நொறுங்கிடுச்சு.. சமந்தாவின் பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

சமீபத்தில் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் நிகழ்ச்சி அதிகமாக பேசப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது. ஒலிம்பிக் நிகழ்ச்சியானது சர்வதேச அளவில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்ச்சியாகும்.  ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும்.

உலகளவில் அனைத்து போட்டியாளர்களும் அதில் பங்கு பெறுவார்கள் அவர்கள் பங்கு பெறுவதற்கான அனைத்து விஷயங்களையும் அந்த நாடுகள்தான் செய்து தர வேண்டும் என்பதால் பல நாடுகள் தங்களது நாட்டில் ஒலிம்பிக் நிகழ்ச்சியை நடத்துவதை பெருமையாக நினைக்கின்றனர்.

ஒலிம்பிக் நிகழ்ச்சி:

அந்த வகையில் 2024 ஒலிம்பிக் பாரிஸில் நடந்து வருகிறது. பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டனர். இந்த வகையில் இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் இதில் கலந்து கொண்டார். வினேஷ் போகத் மல்யுத்தத்தில் சிறந்த வீராங்கனையாக இருந்தவராவார்.

என் இதயமே நொறுங்கிடுச்சு.. சமந்தாவின் பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

அவர் ஏற்கனவே இந்தியாவில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய மெடல்களை வாங்கியவர் ஆவார். சமீபத்தில் விளையாட்டு துறையில் நடக்கும்  பாலியல் ஆத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார் வினேஷ் போகத்.

அப்பொழுது தொடர்ந்து அரசு அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்த பொழுதும் கூட களத்தில் இறங்கி போராட்டத்தை நிகழ்த்தி வந்தார் வினேஷ் போகத், இதனாலையே அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு வீராங்கனையாக அவர் இருந்து வருகிறார்.

மகளிர் மல்யுத்தம்:

இந்த நிலையில் 50 கிலோ எடை பிரிவில் மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார் வினேஷ் போகத். ஜப்பானில் பல காலங்களாக யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு வீராங்கனையை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார் வினேஷ் போகத்.

இறுதிப்போட்டியை பொறுத்தவரை ஒலிம்பிக்கில் அந்த போட்டியில் தோற்றாலும் கூட அவர்களுக்கு வெண்கல பதக்கம் உண்டு. ஜெயிப்பவர்களுக்கு தங்க பதக்கம் கொடுக்க முடியும் கொடுப்பார்கள் எனவே இந்தியாவிற்காக ஒரு பதக்கத்தை கண்டிப்பாக இவர் வாங்குவார் என்பது உறுதியாக இருந்தது.

என் இதயமே நொறுங்கிடுச்சு.. சமந்தாவின் பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

பலரும் இதற்காக வினேஷ் போகத்திற்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர் இந்த நிலையில் தான் 50 கிலோவை விட 100 கிராம் எடை அவர் அதிகமாக இருக்கிறார் என்று கூறு ஒலிம்பிக் கமிட்டி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது. மேலும் அவருக்கு எந்த ஒரு மெடலையும் வழங்கவில்லை.

இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வினேஷ் போகத் இதில் மிகவும் மனமடைந்து இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து பேசிய வினேஷ் போகத் ”தாயே என்னை மன்னித்து விடுங்கள் மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது. நான் தோல்வியடைந்து விட்டேன் உங்கள் கனவுகளும் எனது தைரியமும் முறிந்து போய்விட்டது. இனிமேல் சண்டை போட எனக்கு சக்தி இல்லை” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த பதிவை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்த நடிகை சமந்தா இதயம் நொறுங்கிய எமோஜியை பகிர்ந்திருக்கிறார். தற்சமயம் இது வைரல் ஆகி வருகிறது.