நயன்தாரா கொடுத்த Gift..! – பிரித்து பார்த்து விட்டு சமந்தா என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

நடிகை சமந்தா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பேமஸ் ஆன இவர், பின்னர் கோலிவுட்டில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார் சமந்தா. கடந்தாண்டு நடிகர் நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையும் படிங்க : “சரக்கு விளம்பரத்தில்..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா…! – எல்லாம் பணம் படுத்தும் பாடு..!

விவாகரத்துக்கு பின் சினிமாவில் நடிகை சமந்தாவின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதுதவிர யசோதா, சகுந்தலம், அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

நடிகை சமந்தா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் சமந்தா. சில சமயங்களில் வர்த்தக நிறுவனங்களின் தயாரிப்புகளை புரமோட் செய்யும் விதமாகவும் அதில் சில பதிவுகளை பதிவிடுவார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தனக்கு கொடுத்த கிஃப்டை ஓபன் செய்து அதனை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும், நன்றி நயன் டார்லிங் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …