விவாகரத்து குறித்து முதன் முறையாக வாய் திறந்த நடிகை சமந்தா..!

தென்னிந்திய நடிகைகளில் டாப் லிஸ்டில் இருக்கக்கூடிய நடிகை தான் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. இந்த சூழ்நிலையில் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்காண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்கள்.

மேலும் அண்மையில் வினோத நோயான மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் இவர் தென்கொரியாவிற்கு உயர் சிகிச்சைக்கு செல்வதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த நிலையில் நோயின் தாக்கத்தின் காரணமாக நீண்ட நாட்களுக்கு சினிமாவில் நடிப்பது சிரமம் என்று தற்போது தெரிய வந்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் துயரத்தில் இருக்கிறார்கள்.

மேலும் இவரது விவாகரத்துக்கு காரணம் என்ன என்று இதுவரை தெரியப்படாத நிலையில் தற்போது இவரது நெருங்கிய தோழியும் பாடகியுமான சின்மயி இவரது விவாகரத்து பற்றி சமீபத்தில் ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

சமந்தா நடித்து வரும் ஒவ்வொரு படத்திற்கும் சின்மயி தான் டப்பிங் குரல் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சமந்தா திருமணத்திற்கு பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்ததே அவரது கணவனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான். ஆனால் இங்கு இவர் தனது கணவரை விட அதிகமாக சம்பாதிப்பது தான் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் சமந்தாவின் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது என்ற செய்தி தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மேலும் தற்போது இவரது ரசிகர்கள் இவரின் இந்த நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக திரும்ப வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்திருப்பதோடு அவருக்காக பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

எவ்வளவு நல்ல அந்தஸ்தில் இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் என்பது பெண்மைக்கு அழைக்கப்படக்கூடிய அநீதிகளில் ஒன்றாகி விட்டது அந்த அந்த வகையில் எழுந்த ஈகோவால் தான் சமந்தாவின் வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறலாம்.