தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி-யின் ( Sameera Reddy ) புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி.
பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீரா ரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில், தற்போது பத்து ஆண்டுக்கு முன்பு நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இந்த புகைப்படங்களை பார்க்கும் போது இப்போதும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை எனக்குள் உருவாக்குகின்றது.
நிச்சயமாக என்னுடைய நாட்கள் இதற்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.