Connect with us

“8 மாத காதல், 8 நாட்களில் முடிய இது தான் காரணம்..” – அதிர வைத்த சீரியல் நடிகை சம்யுக்தா..!

Samyuktha Vishnukanth

Actress | நடிகைகள்

“8 மாத காதல், 8 நாட்களில் முடிய இது தான் காரணம்..” – அதிர வைத்த சீரியல் நடிகை சம்யுக்தா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்கு முத்து’ சீரியலில் நடித்தவர்கள் சம்யுக்தா,(Samyukta) விஷ்ணுகாந்த். இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், அதில் முக்கிய லீடு ரோடுகளில் நடித்த சம்யுக்தா, விஷ்ணு காந்த் இருவருமே பிரபலமானார்கள். சம்யுக்தா, ஏற்கனவே ‘நிறைமாத நிலவே’ என்ற வெப்சீரிஸ்சில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்த சீரிஸில் நடித்த பின்பு, இவருக்கு ‘பாவம் கணேசன்’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு பிறகுதான், ‘சிப்பிக்குள் முத்து’ தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரில் நடித்த போது விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் எட்டு மாதங்களுக்கு மேலாக காதலித்துள்ளனர். ஆனால், சீரியலில் இருவரும் ஒன்றாக நடிப்பதால், அதை மற்றவர்கள் பார்வையில், நட்பாக மட்டுமே எடுத்துக்கொண்டனர். ஒரு கட்டத்தில், சீரியல் முடிவடையும் தருவாயில்தான் இருவரும் தங்களது காதலை, வெளிப்படையாக தெரிவித்தனர்.

சம்யுக்தா

Samyukta

விஷ்ணுகாந்த் ஏற்கனவே ஜீ தமிழ் சீரியலில் நடித்திருந்த நிலையில், அவருக்கும் சம்யுக்தாவுக்கும் காதல் என்பது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியல் நடிகை, நடிகர் மத்தியிலும் இவர்களது காதல் ஆச்சரியத்தை தந்தது.

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா காதல் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இருவரது வீட்டாருக்கும் தகவல் தெரிந்த நிலையில், இவர்களது திருமணம் சிறப்பாக, விமரிசையாக நடந்தது.ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதலாகி, இப்போது இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.

இதை, அவர்கள் ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரிவித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். அதாவது, விஷ்ணுகாந்த், சம்யுக்தா இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருந்த திருமண புகைப்படங்களை அழித்திருக்கின்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சந்தேகத்தில், இதுபற்றி இருவரிடமும் கேள்வி எழுப்பிய போது, முரண்பட்ட பதில்களை சொல்லி இருக்கின்றனர்.

சம்யுக்தா

Samyukta

அதாவது, எட்டு மாதங்களாக காதலித்து கைூடிய இவர்களது திருமண வாழ்க்கை, சில நாட்களிலேயே முடிவுக்கு வந்திருக்கிறது. சீரியலை விட மிக வேகமாக, இவர்களது காதல், திருமணம் முற்றுப்புள்ளியை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், தனியார் செய்தி சேனல் நேர்காணல் ஒன்றில் பேசிய சம்யுக்தாவின் கணவர் விஷ்ணுகாந்த் சில பகீர் தகவல்களை கூறி இருக்கிறார். அதில், சம்யுக்தாவுக்கு ஒரு தோழி இருக்கிறார்.

நாங்கள் காதலிக்கும் காலகட்டத்திலேயே, அவர் சம்யுக்தாவுடன் பழக்கத்தில் இருந்தார். ஆனால், அந்த தோழி, நட்பாக சம்யுக்தாவுடன் பழகவில்லை. அவளைப்பற்றி ஏதோ குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். அந்த தோழியின் பழக்கம் வேண்டாம் என்று நான் சொன்னேன். அவளிடம் பேசாதே என்றும் அறிவுறுத்தினேன். என்னைவிட அவள்தான் முக்கியம் என, சம்யுக்தா கூறியதால்தான் நான் அவரை விட்டு விலகிவிட்டேன், என்று கூறி இருக்கிறார்.

சம்யுக்தா

Samyukta

இதுகுறித்து, இன்ஸ்டாகிராமில் பேசியுள்ள சம்யுக்தா, இதுபற்றி நேரலையில் வந்து ரசிகர்களாகிய உங்களிடம் பேசுகிறேன். இந்த குழப்பங்களுக்கு எல்லாம் விடை தருகிறேன், தயாராக இருங்கள், என்று கூறி இருக்கிறார்.

எட்டு மாத காதலில் புரிந்துகொள்ளாத இவர்களது அன்பு, இனிமேலா புரியப்போகிறது? சினிமா நடிகர்களை போல, சீரியல் நடிகர்களின் திருமண வாழ்க்கையும் இப்படி குளறுபடியாக போய் விடுகிறதே? என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சம்யுக்தா

Samyukta

சரி, அவர் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார், இனி சம்யுக்தா என்ன சொல்லப்போகிறாரோ என்றுதான் பார்ப்போம். சீரியலை விட நிஜத்தில் வரும் இதுபோன்ற ‘பஞ்சாயத்து’களையும் சீரியலை போலவே, சுவாரசியமாக ரசித்துவிட்டு போவோம் என்பது, பலரது கருத்தாக இருக்கிறது.

Continue Reading

Top 5 Posts Today

To Top