பிரபல நடிகை சனம் செட்டி திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இணைய பக்கங்களில் தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமானது தான் அதிகம்.
மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆக்கினார். இதன் மூலம் இவருக்கு பெருவாரியான ரசிகர்களும் நல்ல அறிமுகமும் கிடைத்தது.
என்றாலும் கூட, தற்போது வரை சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் தர்ஷன் என்பவர் தன்னை நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக பகீர் புகார் ஒன்றைக் கூறினார்.
மேலும், நிச்சயதார்த்தம் செய்து கொண்டதற்கான புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு தர்ஷன் பிரிந்து சென்ற பிறகு அவரிடம் கேட்டபோது அவளிடம் நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதையெல்லாம் யோசித்துப் பார்த்து தான் நான் அவளை பிரிகிறேன் என்று கூறியிருந்தார் தர்ஷன். அவர் கூறிய முக்கிய காரணம், நடிகை சனம் செட்டி பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் என்றால் பகிர்வேன் என என்னிடமே கூறினார்.
மட்டுமில்லாமல் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது வெளியே இருந்த இவர் டூ பீஸ் உடையில் அதுவும் நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு பேட்டி கொடுத்திருக்கிறார். ஒரு வருங்கால கணவராக இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இதற்கான சரியான பதிலும் சனம் செட்டி இடம் இருந்து எனக்கு கிடைக்கவில்லை. அதனால் தான் அவரை பிரிகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இணைய பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுக்கு பதில் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் நடிகை சனம் செட்டி இடம் ரசிகர் ஒருவர் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். ஆனால் படங்களில் உங்களை பார்க்க முடிவதில்லை என கூறி இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த நடிகை சனம் செட்டி தம்பி கேள்வி கேட்பது ரொம்ப ஈசி ஆனா என்ன பதில் சொல்றது.. நல்ல படம் வந்தால் நான் பண்ண மாட்டேனா..? என கூறியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து இன்னொரு ரசிகர் தர்ஷன் பெயரை பயன்படுத்தி கொண்டு உங்களை மார்க்கெட் செய்து கொள்ள விரும்புகிறீர்கள். பிச்சைக்காரி. என்று கூறியிருக்கிறார்.
இதனை பார்த்த நடிகை சனம் செட்டி.. நீதான் என்னுடைய கவனத்தை பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாய். யார் பிச்சைக்காரி..? You Fake Idiot என்று கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.