அந்த நேரத்தில் கூட என் மார்பை பிடித்து சுகம் கண்டனர்.. வம்சம் சீரியல் சந்தியா கண்ணீர்..!

அந்த நேரத்தில் கூட என் மார்பை பிடித்து சுகம் கண்டனர்.. வம்சம் சீரியல் சந்தியா கண்ணீர்..!

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் சீரியல் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த சீரியலில் நடித்த சந்தியா ஜகர்லமுடி, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கண்ணீர் மல்க பேட்டி ஒன்றினை தந்து இருக்கிறார்.

உங்களுக்கு நன்றாகவே தெரியும் தற்போது பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் சீண்டல்கள் சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் சின்னதிரை நடிகைகளுக்கும் திரை மறைவில் அதிக அளவு நடந்தேறி வருகிறது.

வம்சம் சந்தியா..

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான சந்தியா வம்சம் சீரியலில் பூமிகா என்ற கேரக்டர் ரோலில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவர் சந்திரலேகா சீரியலில் நடித்து அசத்தியிருந்தார்.

அத்திப்பூக்கள் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று தன் கணவரை விட்டு பிரிந்து இருக்கிறார்.

சாவின் விளிம்பு வரை சென்ற சந்தியாவின் வாழ்க்கையில் பல போராட்டங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை சந்தித்து மீண்டு வந்திருக்கும் இவர் உயிருக்கு ஆபத்தான கட்டங்களில் போராடிய போது நிகழ்ந்த நிகழ்வினை தற்போது பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசி வெளிப்படுத்தினார்.

அந்த நேரத்தில் கூட..

அந்தப் பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை பற்றி பேசி இருக்கும் இவர் சின்னத்திரையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நேர்த்தியாக பகிர்ந்து இருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு சீரியலின் அறிமுக பாடல் காட்சியை கும்பகோணத்தில் இருக்கும் கோயிலில் படம் ஆக்கி இருக்கிறார்கள். அப்போது கோயில் யானையுடன் நடித்துக் கொண்டிருக்கும் போது யானை திடீரென அவரை தாக்கியுள்ளது. ஆனால் இன்று வரை யானையின் மீது இவருக்கு எந்தவிதமான கோபமும் ஏற்படவில்லை.

யானை தாக்கியதால் உடம்பில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பகுதிகளை அகற்றக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் யானை தாக்கியதும் மயக்கம் அடைந்த இவர் அந்த நிகழ்வில் இருந்து உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம் என கூறலாம்.

யானை தாக்கியதோடு அல்லாமல் தன் மேல் கால் வைத்து மிதித்தது போல் இருந்ததாக கூறியவர். இதனால் அளவுக்கு அதிகமான வலி ஏற்பட்டு துடிதுடித்து இருந்த சமயத்தில் யானையிடமிருந்து என்னை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

உயிர் போகக் கூடிய நிலையில் வலியில் துடித்துக் கொண்டு இருக்கும் போது கூட என்னை தூக்கிக்கொண்டு சென்ற டான்ஸ்களில் ஒருவர் அந்த நேரத்தில் கூட என் மார்பை பிடித்து சுகம் கண்டார்.

இந்த நிலையிலும் ஒரு மனிதர் தன்னிடம் இவ்வாறு நடந்து கொண்டதை இது வரை தன் வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான அனுபவமாக உள்ளதாக கூறிய இவர், எதுவுமே செய்ய முடியாத நிலையில் சற்று மயக்கத்தோடு இருந்த காரணத்தால் அந்த டான்ஸ் யார் என்பதை என்னால் தெளிவாக கூற முடியவில்லை.

எனினும் அந்த நேரத்தில் அவர் என் மார்பில் கை வைத்து தவறாக நடந்து கொண்டதை நான் உணர்ந்து கொண்டேன். இந்த விஷயத்தை கூட என் அம்மாவிடம் பகிர்ந்ததில்லை. இதிலிருந்து மீண்டு வரவே பல நாட்கள் ஆனது என்று வம்சம் சீரியல் நடிகை சந்தியா கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருவதோடு ரசிகர்கள் பேசக்கூடிய பேசும் பொருளாகி விட்டது. பெண்மையை மென்மையாக பாதுகாக்க தெரியாமல் இது போன்று பாலியல் பதுமைகளாக பார்க்கக்கூடிய ஆண் வர்க்கம் இருக்கும் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.