என்னோட Boy Friend ஐ பாத்தா இப்படி மாறிடுவேன்.. ஓப்பனாக கூறிய சங்கீதா..

என்னோட Boy Friend ஐ பாத்தா இப்படி மாறிடுவேன்.. ஓப்பனாக கூறிய சங்கீதா..

டிவி சீரியல் நடிகை சங்கீதா, முன்னணி சேனல்களில் மக்கள் மனம் கவர்ந்த பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தார்.

சங்கீதா

46 வயதான ரெடின் கிங்ஸ்லியை சங்கீதா திருமணம் செய்தது குறித்து பலரும் பலவிதமான விமர்சனங்களை எழுப்பினர். அதாவது ரெடின் கிங்ஸ்லிக்கும், சங்கீதாவுக்கும் பொருத்தமே கிடையாது. வயது வித்யாசம் மிக அதிகம். ஜோடிப்பொருத்தமும் இல்லை என்று பலரும் கிண்டலடித்தனர்.

ஆனால், சங்கீதா ரெடின் கிங்ஸ்லியை விரும்பியே திருமணம் செய்ததாகவும், அன்பு நிறைந்த வாழ்க்கைக்கு நாங்கள் தயாராகி விட்டோம் என்றும் ஆரம்பத்தில் கூறியிருந்தார்.

கோலமாவு கோகிலா

ரெடின் கிங்ஸ்லி, கோலமாவு கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக இருப்பார். மாமு வேற மாதிரி ஆயிடும் பார்த்துக்க என, வில்லனையே துப்பாக்கி காட்டி மிரட்டுவார்.

அடுத்து டாக்டர் படத்திலும், அதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் ரெடின் கிங்ஸ்லி நடித்தார். இப்போதும் பல படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தொழிலதிபர்

ரெடின் கிங்ஸ்லியை நடிகராக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அவர் மிகப்பெரிய தொழிலதிபர். 300க்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு கீழ் பணிசெய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  பிட்டு சீனில் நடிக்கும் முன்பு இதை பண்ணேன்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..

சினிமாவில் நடித்து சம்பாதிப்பதை விட, அவருக்கு பிஸினஸ் மூலமாக மிக அதிகமான வருமானம் வந்துக்கொண்டு இருக்கிறது. சினிமா மீதுள்ள ஆர்வத்தால், அவர் படங்களில் நடித்து வருகிறார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி, பொருட்காட்சிகளை நடத்தி வருகிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா. ஆந்திரா என இந்தியா முழுவதும் பொருட்காட்சிகளை நடத்துபவர்.

இதையும் படியுங்கள்: ரகசியம் சொன்ன கார்த்தி.. பொதுவெளியில் போட்டு உடைத்த ஆர்யா.. அட கொடுமைய..

லண்டன் பிரிட்ஜ், பனிமலை, எவரெஸ்ட் சிகரம், தாஜ்மகால் என பல அதிசய விஷயங்களை தனது பொருட்காட்சியில் கொண்டு வந்து வைப்பவர். அதனால் பொருட்காட்சி நடத்தும் தொழிலதிபராக அவர் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.

மென்மையான மனிதர்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் சீரியல் நடிகை சங்கீதா தனது கணவர் ரெடின் கிங்ஸ்லீ பற்றி கூறியதாவது,

இயல்பிலேயே மிகவும் மென்மையான மனிதர். என் மேல ரொம்ப அக்கறையாக இருப்பார். நான் டீச்சர் மாதிரி, அவர் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க.

ஆனா, நான் பார்க்க தான் இப்படி இருக்கேன். அவரை பார்த்தா நான் குழந்தையாக மாறிடுவேன். என்னை கண்ட்ரோல் பண்ணதான் அவங்க இருக்காங்க.

அவரை பார்த்தா குழந்தை மாதிரி மாறிடுவேன். சம்திங் ஸ்பெஷல், அந்த மாதிரி எனக்கு அவர் ஒரு கேரக்டர், என்று கூறியிருக்கிறார் சங்கீதா.

அதாவது, சங்கீதா தன்னோட Boy Friend ஐ பாத்தா, கணவர் ரெடின் கிங்ஸ்லியை பார்த்தா, குழந்தையா மாறிடுவேன் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.