சஞ்சீவின் அக்கா யார் தெரியுமா..? – பரிதாபமாக உயிரிழந்த அழகான நடிகை..! – பிக்பாஸ் வனிதா – சஞ்சீவ் உறவுமுறை..!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஒரு சிலரை தவிர அனைவருமே புதுமுகங்கள் மற்றும் அதிக பெண் போட்டியானர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது வரை 78 நாட்கள் முடிந்துள்ள நிலையில். நிகழ்ச்சியில் இருந்து 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்..இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அவரது சகோதரி பற்றியும் அவரும் ஒரு நடிகை தான் என்பதை பற்றியும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே நடிகர் சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் இப்போது தொடர்கிறது. விஜய்யின் சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவை நடிக்கவும் வைத்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம்தான் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலக்கி வருகிறார். இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. சஞ்சீவ் பற்றிய அவருடைய மனைவியும் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை பதிவு செய்து வருகிறார்.இப்படிப்பட்ட சஞ்சீவ்க்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார் என்பதும் அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம்.

அவரது பெயர் சிந்து, ராம்கி அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர் சின்னத்திரைக்கு திரும்பினார் சிந்து. இந்நிலையில் அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை நீண்ட நாட்கள் இருந்துள்ளது.பிறகு உடல் நல பிரச்சினைகள் வர 33 வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவர் இறக்கும்போது அவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது.

---- Advertisement ----

அவரை தாய்மாமன் சஞ்சீவ் தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாத்து வருகிறார். இதை கடந்த வாரம் நிகழ்ச்சியில் கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சஞ்சீவ் – பிக்பாஸ் வனிதா உறவுமுறை

பலரும் அறிந்திராத இன்னொரு விஷயம் பிரபல நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஒரே சகோதரியான ஷியாமளா அவர்களின் மகன் மற்றும் மகள் தான் சஞ்சீவ் மற்றும் சிந்து ஆகிய இருவரும். அதாவது, பிக்பாஸ் வனிதாவின் சித்தி பையன் தான் சஞ்சீவ். தன்னுடைய சித்திக்கு பிறந்தவர் சஞ்சீவ் என்றாலும், வனிதாவிற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே பிறந்ததால் பிக்பாஸ் வனிதாவிற்கு சஞ்சீவ் அண்ணன் முறை ஆகிறார்.

---- Advertisement ----