நடிகை சிந்துவை நியாபகம் இருக்கா..? எப்படி மரணமடைந்தார் தெரியுமா..?

நடிகை சிந்துவை நியாபகம் இருக்கா..? எப்படி மரணமடைந்தார் தெரியுமா..?

தமிழ் சினிமா மற்றும் சீரியல் என்று இரண்டு துறையிலுமே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சஞ்சீவ். சிறு வயது முதலே விஜய்யின் நண்பராக இருந்த சஞ்சீவ் நிறைய விஜய் திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

புதிய கீதை மாதிரியான திரைப்படங்களில் விஜயுடன் அவர் சேர்ந்து நடித்திருப்பதை பார்க்க முடியும். அதற்குப் பிறகு சீரியலில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் மெட்டி ஒலி மாதிரியான சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்தாலும் போகப்போக இவருக்கு வரவேற்பு கிடைத்தது.

நடிகர் சஞ்சீவ்:

பிறகு திருமதி செல்வம் மாதிரியான நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சஞ்சீவ். இந்த நிலையில் தற்சமயம் வானத்தைப்போல சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இவரது அக்காவான சிந்துவும் தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் முக்கியமான நடிகை ஆவார்.

நடிகை சிந்துவை நியாபகம் இருக்கா..? எப்படி மரணமடைந்தார் தெரியுமா..?

நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதேபோல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி சீரியலில் சஞ்சீவ் மற்றும் சிந்து இருவருமே நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க முடியும்.

நடிகை சிந்து:

இவர் தனது முதல் திரைப்படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து அவருக்கு பட்டிக்காட்டு தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி மாதிரியான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. கடைசியாக சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

ஆனால் அவர் இறந்த பிறகுதான் அந்த திரைப்படம் திரைக்கு வந்தது. சீரியலை பொறுத்தவரை அதிகபட்சம் வில்லி கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார் சிந்து. ஆனால் என்னதான் சீரியல்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்லவராக வாழ்ந்திருக்கிறார் சிந்து.

நடிகை சிந்துவை நியாபகம் இருக்கா..? எப்படி மரணமடைந்தார் தெரியுமா..?

இவர் 1995ஆம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்தார். அதற்கு அடுத்த வருடமே இவர்களுக்கு ஸ்ரேயா என்கிற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆரம்பம் முதலே சிந்துவிற்கு ஆஸ்துமா பிரச்சனைகள் இருந்து வந்தது. ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் கூட மருத்துவர்களை அதற்காக அணுகி சிகிச்சை பெற்றுக் கொண்டு சீரியல்களில் நடித்து வந்தார் சிந்து.

எப்படி மரணமடைந்தார் தெரியுமா?

ஆனால் 2004 இல் வந்த சுனாமி அவருக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 2004 டிசம்பர் 26 இல் சுனாமி வந்தபோது அதனால் நிறைய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டு வந்தனர். அப்பொழுது அவர்கள் அனைவருக்கும் நிதி திரட்டும் வேளையில் இறங்கி இருந்தார் சிந்து.

இந்த சமூக பணிகளுக்காக தொடர்ந்து ஓய்வு இல்லாமல் இவர் பயணித்து வந்தார். இதனால் அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை அதிகமானது என்று கூறப்படுகிறது. பிறகு அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்துள்ளார்கள்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்திருக்கிறார் அவர் இறந்த பொழுது அவரது மகளான ஸ்ரேயாவின் வயது 9 தான் என்று கூறப்படுகிறது. அக்காவின் மறைவு பெரும் துயரத்தை கொடுத்தாலும் கூட தனது மருமகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று சஞ்சீவ் அவரை வளர்க்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இந்த விஷயங்களை பகிரும் சஞ்சீவ் அக்காவின் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று கண்கலங்கியப்படியே கூறும் சஞ்சீவி இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.