சினிமாவில் இது தான் நடக்கிறது விழிப்பாக இல்லையென்றால் லைப்பை காலி செய்து விடுவார்கள் – மனதில் இருந்ததை கொட்டித்தீர்த்த நடிகர் சந்தானம்!

திரைத்துறையில் காமெடி நடிகர்களாக வலம் வந்தவர்களில் கவுண்டமணி, செந்திலை நமக்கு நன்றாக தெரியும். அதற்கு அடுத்தது போல் ஒற்றை வார்த்தை வசனத்தை பேசி  அனைவரையும் கட்டிப்போட்ட நகைச்சுவை புயல் வடிவேலு வந்துட்டான்யா வந்துட்டான்… யாரு… அழுதுடுவேன் என்ற வசனங்களால் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் நகைச்சுவையை யாரும் மறுக்க முடியாது. தற்போது வடிவேலுக்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் சிரிப்புக்கென என தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம் ஆரம்ப நாட்களில் இவர் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

 பின்னர் ஹீரோவாக களம் இறங்க  இப்போது வெளிவந்துள்ள குலு குலு, ஹாரிஸ் ஜெயராஜ்,  சபாபதி போன்ற படங்கள் அனைத்தும் அட்டர் பிளாப் ஆனது. இதற்கு முன்பு சர்வர் சுந்தரம், மன்னவர் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் போன்ற திரைப்படங்கள் படப்பிடிப்பின் போது பலவித பிரச்சனைகளுக்கு உள்ளாகி படப்பிடிப்பு நடக்காமல் மிகப்பெரிய தலைவலியை இவருக்கு தந்துள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி மரண வேதனையை அனுபவித்த கூறியிருக்கிறார்.

 பெரிய போராட்டத்திற்கு பின்னால் தில்லுக்குதுட்டு2 என்ற படம் இவருக்கு மீண்டும் ஒரு கம்பேக்யை கொடுத்துள்ளது. என்றாலும் அவர் ஒன்றரை ஆண்டுகளாக அனுபவித்த ரணத்தின் வலியை கூறி ஆற்றிக்கொண்டு வருகிறார்.

 வாழ்க்கையில் தோல்விகள் ஏற்படும் போதுதான் ஏன் என்று சிந்திக்க தூண்டுவதாக உள்ளது.மேலும் ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன் நாம் அதில் உழைப்பை கடுமையாக செலுத்துகிறோம் என்றால்  எடுக்கின்ற தயாரிப்பாளர் பற்றிய முழு விபரங்களும் தெரிந்து கொள்வது நல்லது .அத்தோடு படத்தை வெளியீடு கூடியவர்கள் சிறப்பான முறையில் அவர்கள் கடுமையான உழைப்போடு அனைத்தையும் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது மிகவும் அவசியம் இல்லை என்றால் இது ஒரு சூதாட்டம் போல எப்போது வேண்டுமென்றாலும் எது வேண்டுமானாலும் நடக்கும்.

 எனவே என்னுடைய வாழ்க்கையில் கடந்த ஒன்றரை வருடங்கள் அணிவித்துக் துன்பத்தை யாரும் அனுபவிக்கக் கூடாது. எல்லாவற்றையும் நாம் சரியான முறையில் செய்தால் மட்டும் தான் இந்தத் துறையில் வெற்றி அடைய முடியும் என்று கூறினார்.

---- Advertisement ----

அத்தோடு தனது மூன்று படங்கள் தோல்வி அடைவதற்கு இதுதான் காரணம் எவ்வளவு உழைப்பை நாம் போட்டு இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் சரியான இடத்தில் அதை சரியான முறையில் வெளியேறும் போதுதான் திரையரங்குகளுக்கு சென்று அது ரசிகர்களின் பாராட்டு கொலைக்கு உள்ளாகும் என்று மனமுருகி பேசியிருக்கிறார்.

---- Advertisement ----