சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் தந்தையைப் போன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டு இப்போது பல படங்களில் நடித்து அந்த ஆசையை நிறைவெற்றி வருகிறார். ரன்வீர் சிங்குடன் இவர் நடித்து வெளியான சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய நடிப்பு திறமையால் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சாரா அலிகான் பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தின் வாரிசு. இவர் நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். இந்தி நடிகர் சைஃயிப் அலிகானின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்ரிதா சிங் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.
சைஃப் அலி கான், அமிர்தா சிங்கை விவகாரத்து செய்து விட்டு, கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தனது அம்மா அமிர்தா சிங்கும் ஒரு நடிகை அப்பாவும் ஒரு நடிகர் எனவே தானும் ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஆசை சாரா அலி கானுக்கு இருந்துள்ளது.இதையடுத்து, கேதார்நாத் என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் இணைந்து நடித்த முதல் படத்திலேயே கலக்கி இருப்பார் சாரா அலிகான். இந்த படம் சில பல பிரச்சினை காரணமாக படம் வெளியாவது சற்று தாமதமானது. படம் தாமதமாக வந்தாலும், இந்த படத்தை பார்த்த அனைவரும் சாரா அலி கானையும் அவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டினர்.
முதல் பட வெற்றியைத் தொடர்ந்து சாரா, ரன்வீர் சிங்குடன் சிம்பா என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வந்த நிலையில் சாராவிற்கு அடுத்தடுத்த படங்கள் குவிய தொடங்கியது. அந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக் ஆர்யானுடன் லவ் ஆஜ் கல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இப்படி வெற்றிகளைக்கண்ட சாரா அலி கான் வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து “கூலி நம்பர் ஒன்” என்ற காமெடி படத்தில் நடித்தார்.
மேலும், நடிகர் அக்ஷய் குமார் மற்றும் தனுஷ் உடன் இணைந்து ‘அத்ரங்கி ரே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது நடிகர் தனுஷுக்கு மூன்றாவது ஹிந்தி படம் ஆகும். இந்த படத்தில் சாரா அலிகான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் தனுஷ் மதுரையைச் சேர்ந்த இளைஞராக நடிக்கிறார் . இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா அலிகான், ஒரு பிகினி விரும்பி என்று சொல்லாம் எப்போதும் பிகினி புகைப்படத்தை பதிவிடுவதில் ஆர்வமாக உள்ளார்.
சமீபத்தில், வானவில் போன்ற பிகினியில் சூப்பராக போஸ் கொடுத்து இருந்தார். இந்த போட்டோ ஏகப்பட்ட லைக்குகளை குவித்தது.