இவங்களுக்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா... சரண்யா மோகனுக்கு சான்ஸ் கேட்கும் ரசிகர்கள்!

இவங்களுக்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா… சரண்யா மோகனுக்கு சான்ஸ் கேட்கும் ரசிகர்கள்!

கேரள மாநிலம் ஆலப்புழாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை சரண்யா மோகன் இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தார் .

சரண்யா மோகன்:

இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறந்த துணை நடிகையாகி பின்னர் ஹீரோயின் ஆக வாய்ப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவங்களுக்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா... சரண்யா மோகனுக்கு சான்ஸ் கேட்கும் ரசிகர்கள்!

1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சரண்யா மோகன்.

அதை அடுத்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008 இல் தனுஷ் நடிப்பில் நயன்தாரா ஜோடியாக நடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் பூஜா என்ற கேரக்டரில் சரண்யா மோகன் நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைகாண ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றார் . மேலும் சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுகளையும் பெற்றார்.

தமிழ் படங்களில் சரண்யா:

அந்த திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட நயன்தாராவின் நடிப்புக்கு ஈடாக சரண்யா மோகன் பேசப்பட்டார்.

இவங்களுக்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா... சரண்யா மோகனுக்கு சான்ஸ் கேட்கும் ரசிகர்கள்!

அந்தப் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகன் தனுஷ் மீது ஒருதலையாக காதல் வயப்படும் கேரக்டரில் நடித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

அதை அடுத்து ஜெயம் கொண்டான் , மகேஷ் சரண்யா மற்றும் பலர், பஞ்சாமிர்தம், வெண்ணிலா கபடி குழு, வீரம், ஆறுமுகம் ,அழகர்சாமியின் குதிரை ,வேலாயுதம், ஒஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக அடுத்தடுத்த தமிழ் திரைப்படங்களில் மிகவும் பவ்யமாக ஹோமிலியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக சரண்யா மோகன் இடத்தை பிடித்தார்.

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த சரண்யா மோகன் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்ட சரண்யா மோகன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

யாராச்சும் சான்ஸ் கொடுங்க….

இவங்களுக்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா... சரண்யா மோகனுக்கு சான்ஸ் கேட்கும் ரசிகர்கள்!

அந்த வகையில் தற்போது தீக்குச்சி பட்டாசா பாடலுக்கு செம க்யூடாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதில் அவரது க்யூட்டான நடனத்தை பார்த்து அவரது ரசிகர்கள் இவங்களுக்கு இவங்களுக்கு யாராச்சும் மீண்டும் சான்ஸ் கொடுங்களேன் மறுபடியும் தியேட்டரில் பார்த்து ரசிக்க ஆசையா இருக்கிறது.

கியூட்னஸ் மாறாமல் இன்னும் அப்படியே இருக்காங்களே என சரண்யா மோகனின் இந்த நடன வீடியோவை பார்த்து ரசித்து தள்ளி இருக்கிறார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …