“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா பொன்வண்ணன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக இவர் அம்மா கேரக்டரை செய்யும் போது அது கேரக்டராக யார் கண்ணிலும் படாது ஏனென்றால் அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடக் கூடிய ஒரு அற்புத குண சித்திர நடிகையாக திகழ்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்..

சரண்யா பொன்வண்ணனை பொருத்த வரை தமிழ் திரை உலகில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.


இதையும் படிங்க: இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

ஒரு காலகட்டத்தில் திரை உலகில் இருந்து வெளியேறிய இவர் 8 ஆண்டுகள் ஓய்வெடுத்து கொண்ட இவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு ராம் படத்தில் அம்மா கேரக்டரை செய்த இவர் தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.


இவரது சிறப்பான நடிப்பிற்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பிலிம் பேர் விருதினை இரண்டு முறை பெற்று இருக்கிறார். அத்தோடு 2010 ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென் மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் நடித்ததற்காக பெற்றுக்கொண்டார்.

அந்த நேரத்தில் யார் வந்தாலும் நான் வீட்டில் இல்லை..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் சரண்யா பொன்வண்ணன் கூச்சமின்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதில் பொதுவாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய எண்ணம் கொண்டவர் என்ற கருத்தை கூறினார்.


இதனை அடுத்து தான் எப்போதும் சிறப்பான முறையில் ஒப்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் தன் மனநிலையும், உடல் நிலையும் பிரஷ்ஷாக இருப்பதைப் போல் உணர்ந்தால் தான் இவர் யாரையும் சந்திப்பார் இல்லையென்றால் சந்திக்க விரும்ப மாட்டார் என்ற தகவலையும் தந்திருக்கிறார்.

கூச்சமின்றி சொன்ன விஷயம்..

மேலும் இவருக்கு சோம்பலாகவோ அல்லது நேர்த்தியான முறையில் இல்லாத சமயத்திலோ யார் வந்தாலும் கூச்சமின்றி தான் வீட்டில் இல்லை என்று சொல்லிவிடுவேன். என்னைப் பார்த்து தான் இன்று என் பிள்ளைகள் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்.

அத்தோடு பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு பிள்ளைகள் நடப்பதை விட பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து கற்றுக் கொண்டு நடப்பது தான் அதிகம் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் எப்போதும் முக அழகோடு மட்டுமல்லாமல் மன அழகும் மேக்கப்பும் கலையாமல் உற்சாகமாக இருக்கக்கூடிய வேளையில் பிறரை சந்திப்பதை வழக்கமாகவும் அவரோடு கலந்து உரையாடுவதில் மகிழ்ச்சியாகவும் உணர்வார் என்று கூறிய கருத்து பரவலாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: இப்படி செஞ்சா உடம்பு மோசமாகிடும்.. சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமை..


அத்தோடு அந்த மாதிரியான ஒப்பனைகள் ஏதும் இல்லாமல் சோர்வாக இருக்கக்கூடிய சமயத்தில் யார் வந்தாலும் நான் வீட்டில் இல்லை என்று சொல்லிடுவேன் என்று கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களால் அதிகளவு பேசக்கூடிய பேசும் பொருள் ஆகிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் சரண்யா பொன்வண்ணனின் இந்த ஆட்டிட்யூட் மிகவும் சிறப்பானது இதனை ஃபாலோ செய்வதின் மூலம் நன்மையே ஏற்படும் என்பது போன்ற கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.