இதை பண்ணலனா என்னை தூக்கிடுவாங்க-ன்னு சொன்னா..! – மறைந்த நடிகை குறித்து சரண்யா துராடி..!

மறைந்த நடிகை விஜே சித்ரா குறித்து பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி பலரும் அறிந்திடாத ஒரு புது தகவலை பதிவிட்டு இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரண்யா துராடி சுந்தர்ராஜ் வி.ஜே சித்ரா குறித்து கூறியதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த சீரியலில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் அதிக அளவில் இருந்ததாக என்னிடம் கூறினார்.

என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை என்று புலம்பினார். அதற்கு உனக்கு இப்படியான காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை என்றால் ஒன்று படக்குழுவிடம் நீ கூறி விட வேண்டும் அல்லது உனக்கு வரக்கூடிய கணவர் இதெல்லாம் வெறும் நடிப்பு தான் இது உன்னுடைய வேலை என்று அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

ஒன்று சீரியல் குழு தரப்பில் நீ உன்னுடைய நிலையை அறிவிக்க வேண்டும் அல்லது உனக்கு வரக்கூடிய கணவர் உன்னை உணர்ந்தவராக இருக்க வேண்டும் உனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது சிரமமாக இருந்தால் படக்குழு இடம் இனிமேல் என்னால் இப்படியான காட்சிகளில் நடிக்க முடியாது என்று கூறிவிடலாம்.

ஆனால் நீ அப்படி கூறும் பொழுது இத்தனை நாட்களாக நீ ஏதோ தப்பு செய்து கொண்டிருந்தது போல பிம்பம் ஏற்படும். இது போன்ற காட்சிகளை எழுதும் பொழுது கொஞ்சம் கவனமாக எழுதுங்கள் என்று கூறுவது ஒரு வகை.. இப்படியான காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று கூறுவது இன்னொரு வகை.. நீ என்ன கூற போகிறாயோ அதை முடிவு செய்து சொல்லிவிடு என்று கூறினேன்.

அதற்கு அவள், நான் ஒரு வேளை இப்படியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறுவதால் என்னை அந்த சீரியலில் இருந்து தூக்கி விட்டால் என்ன செய்வது..? என்னுடைய கதாபாத்திரத்தை கூட தூக்கிடுவாங்க.. நான் என்ன செய்வது..? உனக்கு சீரியல் இல்லை என்றால் செய்தி வாசிக்க சென்று விடுவாய்.. நான் எங்க போறது.. என்ற என்று கூறினால்.

இந்த பயம் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது என பதிவு செய்திருக்கிறார் சரண்யா துராடி சுந்தர்ராஜ்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …